பிரபல ஓ டி டி தளத்தில் ஃபர்கானா திரைப்படம் !

பிரபல ஓ டி டி தளத்தில் ஃபர்கானா திரைப்படம் !

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் திரைப் படம் ஃபர்ஹானா. இந்தப் படத்தில் தன்னுடைய, குழந்தைகளுக்காக மத கட்டுப்பாடுகளை கடந்து வேலைக்குச் செல்லும் ஒரு பெண்ணின் வாழ்க்கை பின்னணியை படமாக்கியுள்ளனர்.

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ஃபர்கானா திரைப்படம் பல்வேறு கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது. படத்தின் பெரிய பலம், கதாபாத்திரத் தேர்வு. ‘ஃபர்ஹானா’ என்ற பாத்திரத்துக்குள் அப்படியே பொருந்திப் போகிறார், ஐஸ்வர்யா ராஜேஷ்.அவர்தான் முதன்மை பாத்திரம் என்பதால், சின்ன சின்ன அசைவுகளில் கூட ‘ஃபர்ஹானா’வாகவே வாழ்ந்திருக்கிறார்.

'பர்ஹானா' திரைப்படம் வெளியானதையடுத்து மக்கள் மத்தியில் நல்ல பாராட்டைப் பெற்றது. இப்படம் வெளியாவதற்கு முன்பு மதவெறுப்பை தூண்டுகிறது என்று பல சர்ச்சைகளில் சிக்கி இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்கள் இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ்

திருவல்லிக்கேணி பகுதியில் வசிக்கும் நடுத்தர முஸ்லிம் குடும்ப வாழ்க்கையையும் பொருளாதாரத் தேவையை எதிர் கொள்ளும் ஓர் இளம் பெண்ணின் மனநிலையையும் இயல்பாகக் காட்டியிருக்கிறார், இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். பெண்களுக்கான பொருளாதார விடுதலையைப் பேசும் அவர், வேறு பெயர்களில் முகமறியா நபர்களுடன் நடக்கும் ‘ஃபிரண்ட்ஷிப் சாட்’களின் மூலம் வரும் ஆபத்துகளையும் எதார்த்தமாகக் காட்சிப்படுத்தி எச்சரித்திருக்கிறார்.

ஜித்தன் ரமேஷுக்கு அப்பாவி கணவராக சிறப்பான வேடம். இயலாமையின் வெளிப்பாடாக இருக்கும் முகத்தோடு, ‘மீட்டர்’ தாண்டாத நடிப்பில் கவனம் ஈர்க்கிறார்.

இந்த நிலையில் வருகின்ற ஜூலை ஏழாம் தேதி சோனி லைவ் ஓ டி டி தளத்தில் ஃபர்கானா திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com