ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய க்ரைம் த்ரில்லர் தொடர், ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமாக அமைகிறது .
இந்தத் தொடரில் கே.கே.மேனன், ராஷி கன்னா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். இது பிப்ரவரி 10ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் 240 நாடுகளில் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.
‘தி ஃபேமிலி மேன்’ஐ உருவாக்கிய பிரசித்திபெற்ற படைப்பாளிகளின் அடுத்த உருவாக்கம்தான் ஃபார்ஸி திரைப்படம்.
க்ரைம் திரில்லர் வகைகளிலேயே தனித்துவமான கதைக்களத்தோடு, திகழும் நகைச்சுவைக் காட்சிகள் அடங்கிய இது எட்டு எபிசோட்களில் படமாக்கப்பட்டுள்ளது.
செல்வந்தர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் அமைப்பிற்கு ஒரு பாடம் கற்பிக்க நினைக்கும் ஒரு புத்திசாலித்தனமான தெருக் கலைஞனைச் சுற்றி இதன் கதை பின்னப்பட்டுள்ளது. அவருக்கும் சட்டத்தை அமலாக்கும் அதிகாரிகளுக்கும் இடையேயான விறுவிறுப்பான போட்டி நிலவுகிறது. சீதா ஆர்.மேனன் மற்றும் சுமன் குமார் இருவரும் ராஜ் & டிகே உடன் இணைந்து ஃபார்ஸி கதையை எழுதியுள்ளனர்.
ப்ரைம் வீடியோ இந்தியாவின் ஒரிஜினல்ஸ், தலைவரான அபர்ணா புரோஹித், “2023 ஆண்டின் துவக்கம் இதைவிட சிறப்பாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை. ஃபார்ஸி திரைப்படம் நடுத்தர மக்களின் கனவுகள், அபிலாஷைகள் மற்றும் மனக் கலக்கம் நிறைந்த அவர்களின் வாழ்க்கைச் சூழலில் வேரூன்றிய உணர்வுகளோடு விலா எலும்புகளை நோகவைக்கும் அளவுக்குச் சிரித்து மகிழவைக்கும்” என்றார்.