Feb 14 valentine's day: Tamil Serial Actor Actress Love Story
Feb 14 valentine's day: Tamil Serial Actor Actress Love Story

சின்னத்திரையின் ரியல் காதல் ஜோடிகள்!

Feb 14 valentine's day
Published on

காதல் என்பது யாருக்கு தான் இல்லை. பல வருடங்களாக காதலித்து போராடி வாழ்க்கையில் ஒருவரை கரம் பிடிப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. எப்படி வெள்ளித்திரையில் பல நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்களோ அப்படி சின்னத்திரையிலும் பல ஜோடிகள் எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார்கள்.

ஶ்ரீஜா - செந்தில்:

ரேடியோவில் ஆர்ஜேவாக பணியாற்றி வரும் செந்தில் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தார். இவருக்கு ஜோடியாக ஶ்ரீஜா நடித்திருந்தார். இவர்களது ஜோடியை பார்த்து ஊரே பொறாமை படும் அளவிற்கு அட்டகாசமாக நடித்திருப்பார்கள். ஏன் ரீலை ரியல் ஆக்க கூடாது என நினைத்த இந்த ஜோடி கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இப்போது குழந்தையுடன் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழித்து வருகின்றனர்.

சஞ்சீவ் - ஆலியா மானசா:

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகை ஆலியா மானசா. அதே சீரியலில் ஹீரோ பாத்திரத்தில் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்த ஜோடிக்கு 2 குழந்தைகள் உள்ளன.

Feb 14 valentine's day: Tamil Serial Actor Actress Love Story
Feb 14 valentine's day: Tamil Serial Actor Actress Love Story

கண்மணி - நவீன்:

சின்னத்திரை நாயகனாக வலம் வரும் நடிகர் நவீனை செய்திவாசிப்பாளரான கண்மணி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இணையத்தில் அதிக பாலோயர்களை கொண்ட இவர்கள் இருவருக்கும் தற்போது ஒரு குழந்தை பிறந்துள்ளது.

ராஜ்கமல் - லதா:

முன்னணி ஜோடியாக வலம் வருபவர் தான் இந்த ஜோடி. ராஜ்கமல் மற்றும் அவரது மனைவி லதா பல சீரியல்களில் நடித்துள்ளனர். இருவரும் சின்னத்திரையில் கொடி கட்டி பறந்து வரும் நிலையில் சமீபத்தில் இவர்களது வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது பரவலாக பேசப்பட்டது.

Feb 14 valentine's day: Tamil Serial Actor Actress Love Story
Feb 14 valentine's day: Tamil Serial Actor Actress Love Story

ஷபானா- ஆரியன்:

'பாக்கியலட்சுமி' தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் ஆர்யனை செம்பருத்தி சீரியல் புகழ் ஷபானா இருவரும் காதலித்து கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

சித்து - ஸ்ரேயா:

ராஜா ராணி சீரியலில் ஹீரோவாக நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் சித்து. கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ’திருமணம்’ சீரியலில் ஜோடியாக சேர்ந்து நடித்தவர்கள் தான் ஸ்ரேயா மற்றும் சிந்து. இந்த சீரியலில் ஒன்றாக நடித்ததன் மூலம் இருவரும் காதலிக்க தொடங்கினர். இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

Feb 14 valentine's day: Tamil Serial Actor Actress Love Story
Feb 14 valentine's day: Tamil Serial Actor Actress Love Story

இதேபோன்று ஏராளமான ஜோடிகள் திருமணம் செய்து விவாகரத்தும் பெற்றுள்ளனர். ஆனால் காதல் அழிவதில்லை என்பது போல் இந்த ஜோடிகள் எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com