படப்பிடிப்பில் தீ விபத்து : மயிரிழையில் தப்பிய 'ஃ' பட ஹீரோவும் இயக்குநரும்!

படப்பிடிப்பில் தீ விபத்து : மயிரிழையில் தப்பிய 'ஃ' பட ஹீரோவும் இயக்குநரும்!

அம்பிகாபதி மூவி மேக்கர்ஸ் சார்பில் பொன் செல்வராஜ் தயாரிப்பில் மற்றும் C.நளினகுமாரி இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'ஃ'. இயக்குநர் ஸ்டாலின் V இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

பிரஜின் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக டூரிங் டாக்கீஸ் புகழ் காயத்ரி ரமா நடித்துள்ளார். இன்னொரு கதாநாயகனாக முக்கிய வேடத்தில் பருத்திவீரன் வெங்கடேஷ் நடிக்க, வில்லனாக இயக்குநர் ஸ்டாலின் நடித்துள்ளார். மேலும் ஏழாம் அறிவு ராமநாதன், KPY சரத், KPY வினோத், வடக்கு வாசல் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சதீஷ் செல்வம் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தேவசூர்யா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அரவிந்தன் ஆறுமுகம் படத்தொகுப்பை மேற்கொள்ள, சண்டைக் காட்சிகளை ஆக்சன் பிரகாஷ் வடிவமைத்துள்ளார்

"சென்னை தரமணியில் நானும் நாயகன் பிரஜினும் மோதும் சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இந்த படத்தின் முக்கியமான சண்டை காட்சி ஒன்றை படமாக்கியபோது தீ விபத்தில் இருந்து தானும் கதாநாயகன் பிரஜினும் மயிரிழையில் உயிர்தப்பிய சம்பவத்தையும் விவரித்தார் இயக்குநர் ஸ்டாலின்.

கதைப்படி மிகப்பெரிய குற்றவாளியாக நான் ஒரு குடிசையில் பதுங்கி இருப்பேன். ஆனால் போலீசார் நான் ஏதோ ஒரு மிகப்பெரிய இடத்தில் ஒளிந்து இருப்பதாக தேடிக்கொண்டிருப்பார்கள். கதாநாயகன் பிரஜின் மட்டும் நான் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து வந்து விடுவார்.

அப்போது எனக்கும் அவருக்கும் நடக்கும் சண்டைக் காட்சிதான் அங்கே படமாக்கப்பட்டது. ஆனாலும் ஆக்சன் இயக்குனர் ஆக்சன் பிரகாஷ் துரிதமாக செயல்பட்டு அந்த காட்சிகளை திட்டமிட்டபடி படமாக்கி முடித்தார்" என்று கூறினார் இயக்குநர் ஸ்டாலின்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com