லேடி சூப்பர் ஸ்டார் மீது வழக்குப்பதிவு.. சர்ச்சையில் சிக்கிய அன்னப்பூரணி படம்!
Jaikumar Vairavan

லேடி சூப்பர் ஸ்டார் மீது வழக்குப்பதிவு.. சர்ச்சையில் சிக்கிய அன்னப்பூரணி படம்!

Published on

அன்னப்பூரணி திரைப்படம் லவ் ஜிகாத்தை ஊக்கமளிக்கும் வகையில் உள்ளதாக கூறி மும்பையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனரான நீலேஷ் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, கார்த்திக் குமார், குமாரி சச்சு, அச்யுத் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

ஜீ ஸ்டூடியோஸ் ட்ரைடண்ட்  ஸ்டுடியோஸ்  மற்றும்  நாட்  ஸ்டூடியோ இணை தயாரித்துள்ளது. சத்யன் சூர்யா ஒளிப்பபதிவு செய்துள்ளார்.

கோயிலில் பிரசாதம் செய்யும் ஐயரின் மகளாக பிறந்த அன்னப்பூரணி செஃப் ஆகும் கனவோடு அசைவத்தை கையில் எடுக்கிறார். இதற்கு மொத்த குடும்பமும் எதிர்ப்பு தெரிவிக்க தன் ஆசைக்காக வீட்டை விட்டு வெளியேறி சாதனை படைக்கிறார். இது ஒரு புறம் இருக்க முஸ்லீம் நபரான ஜெய்யை நயன்தாரா காதலித்து வருவார். நயன்தாராவின் வெற்றிக்கு பின் ஜெய்யின் தூண்டுதலும், ஊக்குவித்தலும் இருக்கும்.

இந்நிலையில், இப்படத்தின் சில காட்சிகள் லவ் ஜிகாத் என இந்துத்துவ அமைப்புகளால் கூறப்படும் இஸ்லாமிய மதமாற்றத்தை ஆதரிக்கும் வகையில் இருப்பதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். அன்னபூர்ணி திரைப்படம் லவ் ஜிஹாத்தை ஊக்குவிப்பதாக கூறி மும்பையில் உள்ள எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி படத்தின் ஒரு காட்சியில் நடிகர் ஜெய், ராமர் இறைச்சி உண்பவர் என்று கூறியதாகவும், இது மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் புகாரில் கூறிப்பிடப்பட்டுள்ளது. அந்த புகாரில் நயன்தாரா மட்டுமின்றி நடிகர் ஜெய், இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா, தயாரிப்பாளர்கள் ஜத்தின் சேதி, ரவீந்திரன், புனித் கோனேகா, ஷாரிக் படேல், மோனிகா ஷெர்கில் (நெட்பிளிக்ஸ்) ஆகியோர் மீதும் புகார் வழங்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com