தென்னிந்தியாவின் முதல் ஸ்னூக்கர் திரைப்படம்!  

ஸ்னூக்கர் திரைப்படம்
ஸ்னூக்கர் திரைப்படம்

 ஸ்னூக்கர் விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு தென்னிந்தியாவின் முதல் ஸ்னூக்கர் திரைப்படமாக உருவாகியுள்ளது சஞ்சீவன் என்ற திரைப்படம். மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பாலுமகேந்திராவின் சினிமாப் பட்டறையில் பயின்ற மணி சேகர் இயக்கத்தில் உருவாகியுள்ளது இப்படத்தில் வினோத் லோகிதாஸ், ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா, உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  

இப்படத்தை பற்றி இயக்குனர் மணி சேகர் கூறியதாவது: 

நான் இயக்குனர் பாலுமகேந்திராவின் பட்டறையில் பயின்ற மாணவன் என்பதாலே படங்களைப் புதுவிதமாக அணுக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்துவிட்டது. 

இப்படம் தென்னிந்தியாவின் முதல் ஸ்னூக்கர் திரைப்படம். நான் அதிக நேரம் ஸ்னூக்கர் விளையாட்டிற்காக நண்பர்களுடன் செலவழித்திருக்கிறேன்.

ஸ்னூக்கர் என்றாலே சூதாட்டம், அதிக பணம் வைத்து விளையாடக் கூடியது போன்ற பேச்சுக்கள் எழுகிறது. அது தவறு உண்மையில் மற்ற விளையாட்டுக்களைப் போன்றுதான் இதுவும் ஒரு சுவாரசியமான விளையாட்டு. 

சஞ்சீவன்  திரைப்படம்
சஞ்சீவன் திரைப்படம்

இப்படம் இளைஞர்களை வெகுவாகக் கவரக்கூடிய வகையில் கதையையும் திரைக்கதையையும் வடிவமைத்துள்ளேன். ஒரு படம் என்றால் அது ஒரு ஜானரை மையமாக வைத்துக் கொண்டு உருவாக்குவார்கள். இந்தப் படத்தில் ரசிகர்கள் அனைத்து விதமான ஜானர்களையும் அனுபவிக்கலாம். இதில் காதல், காமெடி, திரில்லர் போன்ற விஷயங்களை ரசிகர்கள் அனுபவிக்க முடியும்.  

இப்படத்தில் நடந்த முக்கியமான ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். படப்பிடிப்பில் முக்கியமான காட்சியைப் படமாக்க மழை தேவைப்பட்டது. அதற்காக செயற்கை மழையைத் தயார் செய்ய முயற்சிசெய்தோம். சில காரணங்களால் அதனைத் தயார் செய்ய முடியாமல் போனது. படப்பிடிப்பு தொடங்க இருந்த நேரத்தில் நாங்கள் எதிர்ப்பார்த்த காற்றுடன் கூடிய மழை இயற்கையாக வந்து எங்களை ஆச்சரியப்படுத்தியது.

சஞ்சீவன் திரைப்படத்தின்  நடிகர்கள்
சஞ்சீவன் திரைப்படத்தின் நடிகர்கள்

இயக்குனர் பாலுமகேந்திரா எங்களை நேரில் வந்து ஆசிர்வதித்தைப் போன்று இருந்தது. ஏனென்றால் பாலுமகேந்திரா இயக்கிய மூன்றாம் பிறை படத்தில் இதேபோன்று ஒரு நிகழ்வு நடந்ததாக கேள்விப்பட்டிருக்கிறோம்.

எங்களின் படப்பிடிப்பிலும் இதே போன்று நடந்தது அவரின் ஆசியாகத் தோன்றியது. படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வந்து படத்தை பார்த்து அனைத்தையும் அனுபவியுங்கள். 

-இவ்வாறு அவர் கூறினார். இந்த அக்டோபர் 14-ம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com