
ஒ டி டி தளங்கள் பல்வேறு கதைக்களங்களில் படம் எடுக்கின்றன. ஆனால் நடனத்தைமையப்படுத்தி எந்த தொடரும் தயாரித்தது இல்லை.ஆனால் ஜி 5 ஒரிஜினல் முதல் முறையாக நடனத்தை மையப்படுத்தி தொடர் எடுத்துள்ளது.
இயக்குனர் விஜய் இந்த தொடருக்கு கிரியேடிவ் தயாரிப்பாளரக உள்ளார் இவருடன் பிரசன்னா ஜே. கே, மிருதுளா ஸ்ரீ தரன் உறுதுணையாக உள்ளார்கள். வளரும் கலைஞர்களான தித்யா பாண்டே, சின்னி பிரகாஷ், விவேக் ஜோக் தாண்டே நடிக்கிறார்கள். இவர்களுடன் நாகேந்திர பிரசாத் நடிக்கிறார்.
இந்த தொடரின் ப்ரோமோஷனில் பேசிய மதன் கார்கி "நடனத்தை மைய்யப்படுத்தி வெப்தொடர்கள் கிடையாது. இயக்குவது கடினம்.இதை சாத்தியப்படுத்தி இருக்கிறார் விஜய். இது இவரால் மட்டுமே முடியும் என்கிறார்.
பை வ் சிக்ஸ் செவன் எயிட் என்ற ஸ்டெப்ஸ் புரிந்து கொள்வதற்கு பல நாட்கள் ஆனது இன்று குழந்தைகள் கூட சிறப்ப்பாக ஆடுகிறார்கள் என்கிறார் ஜீவா.
விஜய் பேசும் போது மதன் கார்கியும் சாம் CS என் கனவை நினைவாக்கியத்தில் மிக முக்கிய பங்கு உள்ளது. நடனம் பல விஷயங்களுக்கு திறவுகோலாக உள்ளது என்கிறார். ஒ டி டி யில் முதல் முறை நடனக்கதை வாழ்த்துவோம்.