
தமிழில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' பட நடிகை நிஹரிகா கோனிடெலா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து கணவரின் புகைப்படங்களை நீக்கியுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திரையுலகைப் பொறுத்தவரை, எப்போது வேண்டுமானாலும் எதிர்பாராத விஷயங்கள் நடக்கலாம். அந்தவகையில் தெலுங்கு சினிமாவில் நடிகர் நாக சைதன்யா மற்றும் சமந்தா ஆகியோர் திடீரென விவகாரத்து செய்தியை அறிவித்ததுகூட பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்தவகையில், தற்போது இன்னொரு சம்பவம் தெலுங்கு உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தெலுங்கு உலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியும் நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான நாக பாபுவின் மகள்தான் நிஹரிகா. இவர் தெலுங்கில் சில படங்களும், தமிழில் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்திலும் நடித்துள்ளார். இவர் பிங்க் எலிபேன்ட் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார்.
இவர், டிசம்பர் 2020ம் ஆண்டு Chaitanya Jonnalagadda என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பாகவே, இவருக்கும் இவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, இருவருமே தங்கள் இன்ஸ்டாகிராமில் unfollow செய்துவிட்ட நிலையில், நிஹாரிகாவும் தனது கணவரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கி உள்ளார். இச்சம்பவம் தற்போது தெலுங்கு உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.