நாடு கடந்து ஒலித்த வந்தே மாதரம்.. ரசிகையின் பாடலால் நெகிழ்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்!

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்
Updated on

வெளிநாட்டு ரசிகை ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பாடல் பாடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் இசைக்கு மயங்காதவர் என யாரும் இல்லை. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இவரின் இசையில் நேற்று அயலான் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து இவரது இசையில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்பட்ம் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானிடம் அவரது ரசிகை ஒருவர் பாடல் பாடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் வெளிநாட்டு ரசிகை ஒருவர் காரில் உட்கார்ந்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானிடம் உங்களின் தீவிர ரசிகர் என்று கூறி உங்களுக்காக ஒரு பாடல் பாடவா என கேட்கிறார். அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்புதல் அளிக்கவே அவரும் வந்தே மாதரம் பாடலின் இந்தி வெர்ஷனை பாடியுள்ளார்.

இந்திய பாடலான வந்தே மாதரம் பாடலை அவர் அழகாக பாடியிருக்கும் வீடியோ பலரையும் கவர்ந்து வருகிறது. ரசிகையின் குரலை கேட்டு மயங்கிய ஏ.ஆர்.ரஹ்மானும் அவரை விடியோ எடுத்து தனது இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com