மீனவனாகும் ஜி.வி. பிரகாஷ் !

G V Prakesh 25th Movie Kingstone
G V Prakesh 25th Movie Kingstone
Published on

நடிகர் ஜிவி பிரகாஷ் தனது 25 வது படத்தில் மீனவன் கதாபாத்திரம் ஏற்று நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர் ஜி.வி. பிரகாஷ். அதேநேரம் 2015 ஆம் ஆண்டு வெளியான டார்லிங் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இசையமைப்பதை போன்று நடிப்பிலும் தீவிர ஆர்வம் காட்டியதால் கதாநாயகனாவும் தொடர் வெற்றி படங்களை கொடுத்தார்.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் 25 வது படத்திற்கு கிங்ஸ்டன் என்ற பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தை கமல் பிரகாஷ் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக பேச்சுலர் திரைப்படம் மூலம் பிரபலமடைந்த திவ்ய பாரதி நடிக்கிறார். மேலும் படத்தை ஜிவி பிரகாஷ் நிறுவனத்துடன் இணைந்து ஜி ஸ்டூடியோ தயாரிக்கிறது.

G V Prakesh 25th Movie Kingstone
G V Prakesh 25th Movie Kingstone

படத்தின் டைட்டில் போஸ்டரை உலகநாயகன் கமலஹாசன் வெளியிட்டு இருக்கிறார். இதில் இந்தியா ஃபர்ஸ்ட் சீ ஹாரர் அட்வென்ச்சர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் கிங்ஸ்டன் படம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் ஜிவி பிரகாஷ் மீனவனாக நடிக்க இருப்பதாகவும், இப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் கடலில் எடுக்கப்படுகிறது. இப்படம் கடலில் இருக்கக்கூடிய மர்மத்தை தேடிய மிகப்பெரிய பயணமாக இருக்கும். இது மீனவர்களின் நேர்த்தியான வாழ்வியலை உள்ளடக்கிய புதுமையான படைப்பாக இருக்கும் என்று படக் குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com