சின்னத்திரையில் அறிமுகமாகவிருக்கும் கௌதமி… எந்த சீரியலில் தெரியும்?

Gautami
Gautami
Published on

பல படங்களில் நடித்த நடிகை கௌதமி சின்னத்திரையில் அறிமுகமாகவுள்ளார். எந்த சீரியலில் என்று பார்ப்போமா?

தற்போது ஒவ்வொரு சேனல்களும் சீரியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். முன்பெல்லாம் சீரியல் வாரம் 5 நாட்கள் ஒளிபரப்பாகும். ஆனால், சீரியலுக்கு ரசிகர்கள் அதிகமானதால் வாரத்தில் 7 நாட்களும் சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றன. அதுவும் ஜீ தமிழ், விஜய் டிவி, சன் டிவி ஆகியவை போட்டிப்போட்டுக் கொண்டு புதுபுது கதைகளை இறக்குகின்றனர்.

டிஆர்பி ரேட்டிங்கில் மாற்றி மாற்றி முதலிடத்தை பிடித்து வருகின்றன. கலைஞர் டிவியில் பழைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், டப்பிங் சீரியல்களையும் இறக்கவுள்ளனர். இதற்கிடையே தந்தி டிவி பல புராண இதிகாச சீரியல்களை டப்பிங் செய்து ஒளிபரப்புகின்றனர். அதேபோல் கலர்ஸ் டிவியிலும் டப்பிங் சீரியல்களைப் பார்க்கலாம். இப்படி சீரியல்களுக்கான ஆடியன்ஸ் அதிகமாகி வரும் நிலையில், வெள்ளித்திரையில் நடித்த புகழ்பெற்ற நடிகர் நடிகைகளும் சின்னத்திரையில் அறிமுகமாகி வருகின்றனர். ஏற்கனவே, ராதிகா, சசிகுமார், தேவையாணி போன்றோர்கள் ஒரு மூச்சு சின்னத்திரையில் நடித்தனர்.

இப்படியான சூழ்நிலையில் தற்போது கௌதமியும் சின்னத்திரையில் அறிமுகமாகவுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என இவ்வனைத்து மொழிகளில் நடித்து ஒருகாலத்தில் உச்சத்தில் இருந்தவர் கௌதமி. இப்போது பிறமொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார் கௌதமி. கடைசியாக பாபநாசம் படத்தில் கமலுக்கு ஜோடியாக தமிழில் நடித்தார். இதன்பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. இப்படியான சூழ்நிலையில்தான், இவர் தற்போது சின்னத்திரையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுக்கிறார்.

இதையும் படியுங்கள்:
அடுத்த ஆண்டிலிருந்து ஸ்மார்ட் போன்கள் விலை உயரும் என ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அறிவிப்பு!
Gautami

அதாவது, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் “நெஞ்சத்தை கிள்ளாதே” மெகா தொடர் மக்களின் மனம் கவர்ந்த தொடர்களில் ஒன்றாக உள்ளது. தற்போது இந்த சீரியலில் நடிகை கௌதமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

மேலும் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கவுள்ளார். அதுவும் சின்னத்திரையில் என்பது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பாகவுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com