நடிகராக களமிறங்கியதற்கு காரணத்தை சொன்ன கவுதம் மேனன்!

GVM
GVMImg credit: Film Companion
Updated on

பிரபல இயக்குனரான கவுதம் மேனன் நடிகராக மாறியதற்கான காரணத்தை தெரிவித்தார்.

தமிழில் முன்னணி இயக்குனராக உள்ளவர் கவுதம் மேனன். இவர் எடுத்த பல படங்கள் தமிழில் பிரபலமான திரைப்படங்களாக இருக்கின்றன. இயக்குனராக பிசியாக இருந்த நேரத்தில் நடிகராக களமிறங்கினார். இப்படி பல படங்களில் குணசித்திர வேடம், வில்லன் கதாபாத்திரம் ஏற்று மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, நடிப்பிலும் தற்போது தீவிரம் காட்டி வருகிறார் கவுதம் மேனன். இந்த நிலையில் நடிகர் கவுதம் மேனன் தான் எப்படி நடிக்க வந்தேன் என்பது குறித்து மனம் திறந்து உள்ளார்.

இது குறித்து நடிகர் கவுதம் மேனன் தெரிவித்தது, நடிக்க வேண்டும் என்று நான் விரும்பி நடிப்பை தேர்வு செய்யவில்லை. இது எதார்த்தமாக நடந்தது. எனக்கு நடிகனாக ஆக வேண்டும் என்ற பெரிய விருப்பம் எல்லாம் ஒன்றும் இல்லை. துருவ நட்சத்திரம் படத்திற்காக நடிக்க முன்வந்தேன். பிறகு துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து நடித்து வந்தேன். நடிப்பின் மூலம் கிடைக்கும் சம்பளத்தை கொண்டு துருவ நட்சத்திரத்தை ரிலீஸ் செய்ய பயன்படுத்தி வருகிறேன்.

இதுவரை நான் யாரிடமும் நடிக்க வாய்ப்பு கேட்டு செல்லவில்லை. இப்போதும் பல பட வாய்ப்புகளை நிராகரித்துள்ளேன் என்று தெரிவித்தார்.

தற்போது கூட நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ படத்தில் கவுதம் மேனன் போலீஸ் அதிகாரி வேடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com