விஜய் ரீல் சகோதரி இப்போ என்ன பண்றாங்க தெரியுமா?

jenifer
jenifer

கில்லி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்து பிரபலமான ஜெனிபர் தற்போது என்ன செய்கிறார் என பார்க்கலாம்.

ஒரு வயதில் சினிமாவில் அடியெடுத்து வைத்த ஜெனிஃபர் கடந்த 30 ஆண்டுகளாக முழுக்க முழுக்க சினிமாவில் கலக்கிய பின்னர் சின்னத்திரை பக்கம் கொஞ்சம் கவனம் செலுத்தினார். இவரின் சமீபத்திய புகைப்படங்கள் கூட வெளியாகி இவரா விஜய்யின் தங்கை புவனா என ஆச்சரியத்திற்குள்ளாகினர்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜெனிபர் இன்று வரைக்கும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நம்ப முடிகிறதா. ஆம் கடந்த ஆண்டு கூட இது தொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளபக்கத்தில் 33 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை என தெரிவித்தார்.

சினிமாவில் இருந்து சிறிது பிரேக் எடுத்துக் கொண்டவர் தனது பிசினஸ் ஐடியாவில் கவனம் செலுத்த துவங்கினார். பல நடிகைகள் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தாலும், பிஸினஸ் செய்து வருகின்றனர் சமீபத்தில் நயன் தாரா கூட ஃபெமி 9 என்ற மேக்கப் புரோடக்ட்ஸ், நேப்கின் என அனைத்து பொருட்களையும் தயாரித்து பிஸினஸ் செய்து வருகிறார்.

jenifer
jenifer

இந்த நிலையில், 'natures joy' என்ற பெயரில் கெமிக்கல் ஃப்ரீ பிராடெக்ட்டுகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் ஜெனிபர். முதலில் அவர் அதை உபயோகித்து டெஸ்ட் செய்து பார்த்த பிறகே அதை மற்றவர்களுக்கு விற்பனை செய்து வருகிறார். ஒவ்வொருவரின் ஸ்கின் டைப் தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றாற் போல் தயாரித்து வருகிறார். சோப் மேக்கிங் பயிற்சிகளை கூட வீட்டில் இருந்த படியே கற்று கொடுத்து வருகிறாராம். இவரின் இந்த முயற்சிக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com