
கடவுள் தேசமான கேரளாவில் அரசியலில் கடவுளை சேர்ப்பதில்லை என்று கேரள சர்வதேச திரைப்பட விழா நடிகர் பிரகாஷ் ராஜ் பேச்சு வைரலாகியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. தற்போது 28 வது சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 8 ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதி வரை பல்வேறு அமர்வுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் 80 நாடுகளைச் சேர்ந்த 120 திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. இதற்காக 10 திரையரங்குகள் தேர்வு செய்யப்பட்டு அதில் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்திய திரைத்துறையில் முக்கிய பங்காற்றி நபர்கள், சாதனையாளர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பிரபல திரைக்கலைஞரான பிரகாஷ் ராஜ் கேரள சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசியது, திரைத்துறை எல்லைகளை கடந்து, மொழிகளைக் கடந்து மக்களிடம் ஆதிக்கம் செலுத்தும் மாபெரும் செயல்பாடு.
அதில் குறிப்பாக கேரளாவின் திரைப்படத்துறை மக்கள் வாழ்வியலை எதார்த்தமாக, விளம்பரம் இன்றி காட்சிப்படுத்துவதில் சிறப்பான பங்களிப்பை செலுத்தி வருகிறது. இதனால் தான் தற்போது கேரளா திரைப்படங்கள் உலக அளவில் பெரிதும் ரசிக்கப்படுவதற்கு காரணமாக இருக்கிறது.
மேலும் கேரள மக்கள் திரைத்துறையை அரசியலின் கருத்தியலாக ஏற்கவில்லை. மேலும் கடவுளின் தேசத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால் ஒரு போதும் கடவுளை அரசியலில் சேர்ப்பதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறீர்கள் அதற்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறினார்.