நல்ல கருத்து முக்கியம்: 'வரலாறு முக்கியம்'!

திரை விமர்சனம்
வரலாறு முக்கியம்
வரலாறு முக்கியம்
Published on

சூப்பர் குட்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் படங்கள் என்றாலே குடும்பத்துடன் பார்க்கும் படங்களாக இருக்கும் என்ற கருத்தை பொய்யாக்கி இருக்கிறது சூப்பர் குட்ஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள வரலாறு முக்கியம் திரைப்படம்.

ஜீவா ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை சந்தோஷ் ராஜன் இயக்கி உள்ளார். கோயம்புத்தூர் நகரில் 2052ம் ஆண்டில் கதை தொடங்குகிறது. வயதான VTV கணேஷ், மொட்டை ராஜேந்திரனிடம் கதை சொல்வதாக படம் தொடங்குகிறது.

கோவை நகரில் எந்த ஒரு லட்சியமும் இல்லாமல்,ஊர் சுற்றும் இளைஞன் கார்த்தி (ஜீவா). கார்த்தியின் வீட்டுக்கு அருகில் ஒரு மலையாள குடும்பம் குடியேருக்கிறது.

அந்த குடும்ப தலைவர் (சித்திக்) தனது மகளை துபாய் மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்க எண்ணுகிறார். அதனால் தனது இரு மகள்களை வயது பையன்கள் இல்லாத வீட்டில் பழக வேண்டும் என்று செலக்ட்டிவாக மகள்களுக்கு அறிவுறுத்துகிறார். ஆனாலும் இரண்டாவது மகள் ஜமுனா (பிரக்யா) அப்பாவுக்கு தெரியாமல் கார்த்தியை காதலிக்கிறார்.

ஜீவா - காஷ்மீரா
ஜீவா - காஷ்மீரா

கார்த்தியும் காதலிக்க தொடங்கும் சமயத்தில் ஜமுனாவின் அக்கா யமுனா (காஷ்மீரா பர்தேஷ் )வை பார்த்து விட யமுனாவின் மீது காதல் வயப்படுகிறார். யமுனாவும் காதலிக்க தொடங்குகிறார். யமுனாவின் அப்பா யமுனாவிற்கு துபாய் மாப்பிளையுடன் நிச்சயம் செய்கிறார். கல்யாணம் வரை செல்கிறது.

இந்த கான்செப்ட்டை டைரக்டர் சந்தோஷ் ராஜன் நிறைய இரட்டை அர்த்த வசனங்களுடனும், பாலியல் நகைச்சுவையுடனும் சொல்லியிருக்கிறார் டைரக்டர். லாஜிக் பற்றி எதுவும் கவலைப் படாமல் சிரிக்க வைத்தால் போதும் என்று படம் எடுத்து இருக்கிறார்கள். இது ஓரளவு வெற்றி பெற்று இருக்கிறது.

நாயகன் என்றால் நல்லவனாக இருக்க வேண்டும், ஒரே பெண்ணைத்தான் காதலிக்க வேண்டும் என்ற நடைமுறையை இப்படத்தில் உடைத்திருக்கிறார்கள். ஜீவா மிக சரியாக இந்த கதாபாத்திரத்தில் பொருந்தி போகிறார்.எதைப்பற்றியும் கவலை படாமல் இருக்கும் கதாபாத்திரத்தில் மிக நன்றாக நடித்துள்ளார். கல்யாண வீட்டில் பெண் வேடத்தில் மிக நன்றாக பொருந்தி போகிறார்.

ஜீவா - VTV  கணேஷ்
ஜீவா - VTV கணேஷ்

VTV கணேஷ் இரட்டை அர்த்த வசனங்களை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்தது போல ஒவ்வொரு காட்சியிலும் இரட்டை அர்த்த டயலாக்கை அள்ளி வீசுகிறார். கிரேப்ஸ், குதிரை மாத்திரை என பல பாலியல் காமெடிகளை டைரக்டர் உள்ளே வைத்திருக்கிறார்.

காஷ்மீரா அமைதியாக நடிக்கிறார். பிரக்யா குயூட்டாக, ஆர்ப்பாட்டமாக நடிக்கிறார்.சித்திக் யதார்த்தமான ஒரு மலையாளி அப்பாவாக நடிக்கிறார். சான் ரஹ்மான் இசை துள்ளல் இல்லை சுமார்.

சிறந்த நடிகரான ஜீவாவுக்கு தன் திறமையை காட்டும் படம் இதுவல்ல. இருந்தாலும் ஒரு வெற்றியை தர வேண்டும் என்பதற்காக இது போன்ற கதையில் நடித்துள்ளது நன்றாக தெரிகிறது. குடும்பத்துடன் செல்லாமல் தனியாக இந்த படத்துதை பார்த்தால் நீங்கள் வாய் விட்டு சிரிக்கலாம்.

வரலாறு முக்கியம் -கொஞ்சம் நல்ல கருத்துக்களுக்கும் முக்கியம்- பாஸ்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com