குட்நைட் மணிகண்டனின் அடுத்த படம் லவ்வர்.. பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

லவ்வர்
லவ்வர்

மணிகண்டன் நடிப்பில் உருவாகிவரும் லவ்வர் படத்தின் பர்ஸ்ட்லுக்கை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார்.

காதலும் கடந்து போகும், காலா, ஏலே, சில்லுக்கருப்பட்டி, விக்ரம் வேதா, ஜெய்பீம், குட்நைட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ரஜினி நடித்த காலா படத்தில் நடித்து மிகவும் பிரபலமடைந்தார். தொடர்ந்து ஜெய்பீம் படத்தில் தனது அசாத்திய நடிப்பால் பலரது பாராட்டுக்களையும் பெற்றார். இதையடுத்து சமீபத்தில் வெளியான குட்நைட் படத்தில் கதாநாயகனாக நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தார்.

இவரின் அடுத்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து கொண்டிருந்த நிலையில் அதற்கு அப்டேட் கிடைத்துள்ளது. தற்போது மணிகண்டன் புது படம் ஒன்றில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு பெயர் தான் லவ்வர் என வைக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் பிரபுராம் வயாஸ் இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். படத்துக்கு லவ்வர் என்று பெயரிட்டுள்ளனர். போஸ்டரில் உள்ள படத்தில் கையில் கட்டுடன் மணிகண்டன் அமர்ந்திருக்கிறார். கையில் புகையும் சிகரெட்டும், அருகில் மது பாட்டிலும் உள்ளன. காதலை மையப்படுத்திய படம் என்பதை படத்தின் டைட்டிலும், போஸ்டருமே சொல்லிவிடுகின்றன. குட்நைட் திரைப்படத்தை தயாரித்தவர்கள்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கின்றனர்.

லவ்வரில் கௌரி ப்ரியா நாயகியாக நடிக்க, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிம்பு படக்குழுவினருக்கு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார். காதலர் தினத்தை முன்னிட்டு 2024 பிப்ரவரி 14 படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com