திருமணத்திற்கு பிறகு நயன்தாரா சொன்ன ‘குட் நியூஸ்’

Gold -Nayanthara
Gold -Nayanthara

நடிகையும் லேடி சூப்பர் ஸ்டாருமான நயன்தாரா கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை மிக பிரமாண்டமாய் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு திருமணமான நான்காவது மாதத்தில் வாடகை தாய் முறையில் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றுக்கொண்டனர் இத்தம்பதிகள். திருமணம் குழந்தை என சொந்த வாழ்க்கையில் பிசியாக இருந்த நயன்தாரா மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தன்னுடைய ரசிகர்களுக்கு குட்நியூஸ் ஒன்றினைக் கூறியுள்ளார். அவர் நடித்துள்ள 'கோல்டு' என்ற படத்தின் ரிலீஸ்தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Nayanthara
Nayanthara

மேலும் மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பிரேமம் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் தான் இந்தப்படத்தையும் பிரமாண்டமாக இயக்கி உள்ளார். இப்படத்தில் பிருத்விராஜுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதமே வெளியாக இருந்த இப்படமானது சூட்டிங் பணிகள் முடிவடையாமல் இருந்ததால் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.

தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் யாவும் நிறைவடைந்துள்ளநிலையில் இப்படமானது வருகிற டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் நயன்தாராவின் ரசிகர்கள் திரைக்கு வரும் தங்கள் அபிமான நடிகையின் இத்திரைப்படத்தை காண மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com