வசூலில் கலக்கும் "குட் நைட்" திரைப்படம் !

மணிகண்டன் - மீத்தா ரகுநாத்
மணிகண்டன் - மீத்தா ரகுநாத்

விநாயக் சந்திர சேகரன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் குட்நைட். இந்த திரைப்படம் தமிழ் நாட்டில் மட்டுமே கடந்த 4 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 'ஜெய் பீம்' மணி கண்டன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் இது .

காமெடி மற்றும் ரொமான்டிக் ஜர்னரில் உருவாகியிருக்கும் இப்படத்தில் மீதா, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், ரேச்சல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம். ஆர். பி என்டர்டெய்ன்மெண்ட் எனும் பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நசரேத் பசிலியான், மகேஷ் ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக இயக்குநர் எஸ். பி. சக்திவேல் பணிபுரிந்துள்ளார்.

பெரிதும் எதிர்பார்ப்பில்லாமல் மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் இப்படத்திற்கு நல்ல வசூலும் கிடைத்து வருகிறது.

குறட்டையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவமும் இடம் பிடித்திருக்கிறது. தூங்கும் போது ஒருவர் விடும் குறட்டை, எப்படி மற்றவர்களை பாதிக்கிறது என்பதை நகைச்சுவையாகவும், அர்த்தமுள்ள கதையாகவும் சொல்லியிருக்கிறார்கள் .

தற்போது இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று திரையரங்குகளில் நன்றாக ஒடி வருகிறது .இப்படம் கடந்த 4 நாட்களில் சுமார் ரூ. 1.90 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com