பனியன் தொழிலைப் பின்னணியாகக் கொண்ட ‘குதூகலம்’

பனியன்  தொழிலைப் பின்னணியாகக் கொண்ட  ‘குதூகலம்’
Published on

பனியன் தயாரிப்பில் நடக்கும் சம்பவங்களின் பின்னணியில் தயாராகும் படம் ‘குதூகலம்’. அறிமுக இயக்குநர் உலகநாதன் சந்திரசேகரன் என்பவர் யதார்த்தமான கதையை உருவாக்கி, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டராக அறிமுகமாகிறார்.

துரை செந்தில்குமார் டைரக்ஷனில் சிவகார்த்திகேயன் நடித்த 'காக்கிசட்டை',

'எதிர்நீச்சல்' படங்களில் துணை இயக்குனராகவும், தனுஷ் நடித்த 'கொடி', 'பட்டாசு' போன்ற படங்களில் இணை இயக்குனராகவும் உலகநாதன் சந்திரசேகரன் பணிபுரிந்துள்ளார்.

நிஜ சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 'அங்காடித்தெரு', 'அசுரன்' போன்ற படங்களைப் போன்றதொரு படமாக இது அமையும் என்கிறார்கள்.

திருப்பூர் பனியன் தயாரிப்பில், குறிப்பிட்ட ஒரு பிரிவில் நடக்கும் சம்பவம் முதன்முறையாக தமிழில் படமாக்கப்படுகிறது. இப்படத்தை ரேட் & கேட் பிக்சர்ஸ் சார்பில் M.சுகின்பாபு தயாரிக்கிறார். இவருக்கும் இதுவே முதல் திரைப்படத் தயாரிப்பு ஆகும்.

இளைஞன் ஒருவன், தனது தந்தைக்குச் செய்துகொடுத்த சத்தியத்தை நிறைவேற்ற எடுக்கும் முயற்சிகளும், அவற்றை நிறைவேற்றும்போது குறுக்கே வரும் தடைகளை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதும்தான் கதை.

திருப்பூர் மாநகரின் அடையாளமாக விளங்கும் பனியன் தொழிலின் பின்னணியில் சம்பவங்கள் நடக்கின்றன. அவற்றை நகைச்சுவை ததும்பப் படம் சித்தரிக்கிறது.

படத்தின் கதாநாயகனாக பாலமுருகன் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக 'அசுரன்' படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த அம்மு அபிராமி நடிக்கிறார். தயாரிப்பாளர் எம்.சுகின்பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

படத்துக்கு பியான் சார்ரவ் இசையமைத்திருக்கிறார். மணி பெருமாள் ஒளிப்பதிவை மேற்கொண்டிருக்கிறார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் திருப்பூரிலேயே படமாக்கப்பட்டிருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com