மீண்டும் இணையும் ஜிவி பிரகாஷ் - சைந்தவி..!

G.V. Prakash Kumar and Saindhavi
G.V. Prakash Kumar and Saindhavi

ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் சமீபத்தில் பிரிவதாக அறிவித்த நிலையில் வெற்றிமாறன் படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ்கு மார் 10ஆம் வகுப்பு முதலே பாடகி சைந்தவியை காதலித்து வந்துள்ளார். இதற்கு அவர் சம்மதம் தெரிவித்த பிறகு கடந்த 2013-ம் ஆண்டு பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் அன்வி என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்த ஜோடி தான் ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி. திருமணமான 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்பொழுது இருவரும் மனமுன்வந்து பிரிவதாக அறிவித்துள்ளனர்.

அது பலருக்கும் அதிர்ச்சியை கிளப்பியது. முக்கியமாக ஜி.வி பிரகாஷ் நடிக்க வந்ததால்தான் இருவருக்கும் மனஸ்தாபமே ஆரம்பித்தது. காலம் போக போக அது குறையாமல் வளர்ந்துகொண்டே சென்றது என்று பலரும் பல யூகங்களை காரணங்களாக சொல்கிறார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும்; தங்களது ப்ரைவேசிக்கும், முடிவுக்கும் மதிப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில் ஜி.வி பிரகாஷும், சைந்தவியும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். வெற்றிமாறன் தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் மற்றும் சாயாதேவி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் சார். சித்து இசை அமைப்பில் விவேக பாடல் வரிகளில் உருவான படங்கள் பனங்கருக்கா என்ற இந்த பாடலை ஜி.வி பிரகாஷ், சைந்தவி ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி,வி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் பிரிவதாக அறிவிக்கப்பட்டதற்கு முன்பே இந்த பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டதா என்பது தெரியவில்லை.

விமல் நடிக்கும் சார் படத்தில் தான் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த பாடல் வெளியாகி தற்போது கவனம் பெற்று வருகிறது. போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், தற்போது பனங்கருக்கா என தொடங்கும் முதல் பாடல் வெளியாகியுள்ளது. சித்து குமார் இசையில் உருவான இந்த பாடலுக்கு விவேகா வரிகள் எழுத இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி பாடியுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com