இசையமைப்பாளர்களாக கூட்டணியில் ஆஸ்கார் நாயகர்கள்?
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் சாய்பல்லவி. இவருடைய இந்த சினிமா பயணத்தில் தனக்கென்ற ஒரு ரசிகர் சாம்பிராஜியத்தையே உருவாக்கியுள்ளார். இவர் தற்போது தமிழில் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படத்தில் கதாநாயகியாகவும், நாக சைதன்யாவின் 23-வது படத்தின் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இராமாயணம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் இசையமைப்பாளர் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இராமாயணம்:
இராமர் மற்றும் சீதையின் இராமாயணக் கதையைக் மையமாகக் கொண்டு நெடுந்தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் தொடர்ந்து வந்துகொண்டேதான் இருக்கின்றன. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு ‘மது மந்தனா’ தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பெரியளவிலான பொருட்செலவில் இராமாயணம் கதையை திரைப்படமாக எடுக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
சீதையாக சாய்பல்லவி:
இராமாயணம் திரைப்படத்திற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் இராமர் கதாபாத்திரத்தில் நடிகர் ‘ரன்பீர் கபூர்’ நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் இராவணன் கதாபாத்திரத்தில் கே.ஜி.எஃப் படத்தின் புகழ் ‘யஷ்ஷும்’, சீதை கதாபாத்திரத்தில் ‘சாய் பல்லவி’யும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே முன்னர் சீதையின் கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடிப்பதாகக் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு அனுமான் கதாபாத்திரத்தில் ‘சன்னி தியோல்’ நடிக்கப்போவதாகவும் சொல்லப்படுகிறது.
மூன்று பாகங்கள்:
இத்திரைப்படமானது மொத்தமாக மூன்று பாகங்களாக உருவாக இருப்பதாகவும் பேசப்படுகிறது. இத்தகவல்கள் அனைத்தும் உறுதியாகிவிட்ட நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது.
ஆஸ்கார் நாயகர்களின் கூட்டணி?
இராமாயணம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் இசையமைப்பாளர் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இதில் ஆஸ்கர் வென்ற இரண்டு இசையமைப்பாளர்கள் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
உலகளவில் உள்ள அதிகளவிலான சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த திரைப்படங்கள் ஹாலிவிட்டில் தி லையன் கிங், தி டார்க் நைட், இன்டெர்ஸ்டெல்லர் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் தான் ஹன்ஸ் ஜிம்மர். இராமாயணம் திரைபடத் தயாரிப்பாளர் இவரோடு தற்போது பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி ஏ.ஆர் ரஹ்மானிடமும் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஹன்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இருவருமே தங்களின் சிறந்த இசைத்திறனுக்காக ஆஸ்கார் விருது வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.