ஹன்சிகாவின் ‘லவ் ஷாதி டிராமா’ பர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஹன்சிகாவின் ‘லவ் ஷாதி டிராமா’ பர்ஸ்ட் லுக் வெளியீடு!

ந்திய சினிமாவின் மிகப் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஹன்சிகா மோத்வானி. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில், தனது நீண்ட கால நண்பரான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்துகொண்டார் என்ற செய்தி நாடு முழுவதும் பலராலும் பரவலாகப் பேசப்பட்டது. இப்போது, முதன்முறையாக, விழா கோலமாக இருந்த அந்த நாளில் நடைபெற்ற கொண்டாட்டங்கள், நிகழ்வுகள் மற்றும் கோலாகலமாக அரங்கேறிய நிகழ்வுக்கு பின்னால் நடந்த உற்சாக சம்பவங்களை டிஸ்னி+ஹாட்ஸ்டார் ரசிகர்களின் பார்வைக்குக் கொண்டு வருகிறார்கள்.

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் ஷோவான, 'ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா' ஷோ, நடிகை ஹன்சிகா, சோஹேலுடன் தனது திருமண வாழ்க்கையைத் தொடரப் போவதற்கான முடிவை எடுத்த தருணத்தில் இருந்து, வெறும் ஆறு வாரங்களில் இப்படி ஒரு தேவதை திருமணத்தை எப்படி நடத்தி முடித்தார் என்பது வரை, திருமணத் திட்டமிடுபவர்கள் தொடங்கி, வடிவமைப்பாளர்கள் மற்றும் குடும்பங்கள் வரை கூறும் சுவாரசியமான கதைகள் அடங்கிய ஒரு ஷோவாக இது இருக்கும். அதோடு, ஹன்சிகாவும் அவரது குடும்பத்தினரும் ஹன்சிகாவின் திருமணத்தை சுற்றி நடந்த அசௌகரியமான பிரச்னையை பற்றியும் கூறுகிறார்கள். இது அவரது கனவு நாளை தடம் புரளச் செய்யும் அளவுக்கு எவ்வாறு அச்சுறுத்தியது என்றும் விளக்குகிறார்கள்.

டிஸ்னி+ஹாட்ஸ்டார் மற்றும் ஹன்சிகா இணைந்து ஹாட்ஸ்டார் சிறப்பு நிகழ்ச்சியின் முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ளனர், வெளியீட்டு தேதி மிக விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங் ஓடிடி தளமாகும். இது இந்தியாவில் பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் சுமார் எட்டு மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலுமிருந்து வழங்கி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com