ஹரிப் பிரியா ரிடர்ன்ஸ்! 'நான் மிருகமாய் மாற' திரைப்படத்தில் சசிகுமார்!

Haipariya - Sasikumar
Haipariya - Sasikumar

வல்ல கோட்டை படத்தில் அறிமுகம் ஆன சந்தன தேசத்து தேவதை ஹரிப்பிரியா மீண்டும் தமிழில் நடிக்க வந்துள்ளார். கழுகு படத்தை இயக்கிய சத்திய சிவா 'நான் மிருகமாய் மாற படத்தை இயக்குகிறார்.

சசிகுமார் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார் ஹரிப்ரியா. இந்த படத்தின் ட்ரைலர் ப்ரோமோஷனுக்கு சென்னை வந்திருந்த ஹரிப்ரியா "நான் இந்த படத்தில் சசி குமாருடன் நடித்த காட்சிகள் அனைத்தும் மிகவும் மென்மையான காட்சிகளாக இருந்தன.

sasikumar
sasikumar

ஆனால் இந்த படத்தின் ட்ரைலர் காட்சிகளில் சசிகுமார் செய்யும் வன்முறையை பார்க்கும் போது எனக்கே பயமாக உள்ளது. நான் ஆறு வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்க ஒப்புகொண்டேன் நான் தாயாக நடிப்பதில் எந்த தயக்கமும் இல்லை.என் கேரக்டர்தான் முக்கியம்". என்கிறார்.

"இந்த படத்திற்கு முதலில் காமன் மேன் என்று பெயர் வைத்திருந்தார் டைரக்டர். இந்த படத்தில் வன்முறை உள்ளது. ஆனாலும் நியமான உணர்ச்சிகள் இதன் பின்னணியில் இருக்கிறது அதனால் தான் நடிக்க ஒகே சொன்னேன்"என்கிறார் சசிகுமார். 'நான் மிருகமாய் மாற'- மனிதனுக்குள் இருக்கும் மிருகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com