‘டான் 3’ அவருக்குப் பதில் இவர்!

பாலிவுட் சினிமா - ஒரு ரவுண்ட் அப்!
‘டான் 3’ அவருக்குப் பதில் இவர்!

பாலிவுட் இயக்குனர் ஃபர்ஹான் அக்தர் இயக்கத்தில், பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கான் ‘டான்’ஆக நடித்த ‘டான் 1’ மற்றும் ‘டான் 2’ ஆகிய படங்கள் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன. வில்லனிசம் கொண்ட ஷாருக்கானுக்கு கச்சிதமாகப் பொருந்த, ரசிகர்களும் கொண்டாடினர்.

தற்சமயம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘டான் 3’ படத்தை இயக்கும் பணியில் ஃபர்ஹான் அக்தர் ஈடுபட்டுள்ளார். ஷாருக்கானே மீண்டும் இதில் நடிக்க ஃபர்ஹான் வேண்டுகோள் விடுக்க, கதையை முழுக்க கேட்ட ஷாருக்கான் டானாக நடிக்க விரும்பவில்லையென தெரிவித்துள்ளார். மேலும், தான் வெவ்வேறு விதமான கதைகளில் நடிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் பிற நடிகர்கள் நடித்தாலும் ‘டான் 3’ படம் சிறப்பாக அமையுமென வாழ்த்தினார்.

இப்போது ‘டான் 3’ படத்தில் ரன்வீர் சிங் நடிக்கவிருப்பதாகவும், புதிய ‘டான்’ 2025ல் தொடங்குவதாகவும் ஃபர்ஹான் அக்தர் தெரிவித்துள்ளதோடு, ரன்வீர் சிங்கை அறிமுகம் செய்யும் டீசர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

பின்குறிப்பு:

‘டான்’ தமிழில் ‘பில்லா’ என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

பழைய ‘பில்லா’ படத்தில் ரஜினிகாந்த், புதிய ‘பில்லா’ படத்தில் அஜித்குமார் நடித்திருந்தனர்.

 

‘ஜவானி’ற்காக மீண்டும் ‘சென்னை எக்ஸ்பிரஸ்!’

‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படம் திரைக்கு வந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வெளிவரவிருக்கும் படம் ‘ஜவான்’. ஷாருக்கானின் SRK யுனிவர்ஸ், இந்த இரு படங்களையும் சேர்த்து கொண்டாட தனித்துவமான விளம்பர பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது.

‘ஜவான்’ படம் திரைக்கு வரும்வரை 52 நகரங்களில், ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் சிறப்பு திரையிடலை நடத்த முடிவு செய்து, #10 years of Chennai Express;# 1 Month to Jawan என்கிற ஹேஷ்டேக்குகளுடன் உற்சாகமாக கொண்டாடி வருகிறது ரசிகர் மன்றம் + ஷாருக்கான் யுனிவர்ஸ்.

செப்டெம்பர் 7ஆந் தேதி, இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ‘ஜவான்’  திரைக்கு வரவிருக்கிறது. விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, யோகிபாபு என அநேகர் நடித்துள்ளனர். ‘ஹையோடா’ பாடல் டீசரை தற்சமயம் ஷாருக்கான் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். ‘ஜவான்’ படத்தில் இடம் பெறும் ரொமான்ஸ் பாடல் இது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com