பட்டிதொட்டியெல்லாம் பரவிய ஜிகர்தண்டா.. க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டிடம் வந்த மெசேஜால் படக்குழு குஷி!

ஜிகர்தண்டா
ஜிகர்தண்டா
Published on

பிரபல ஹாலிவுட் நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட் ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவால் ஜிகர்தண்டா படக்குழு மகிழ்ச்சியில் உறைந்துள்ளது.

இன்று தமிழ் சினிமாவில் யாரிடமும் உதவி இயக்குனர்களாக இல்லாமல் பலர் படம் தந்து வெற்றி பெறுகிறார்கள். இப்படி உதவி இயக்குனர்களாக இல்லாமல் இயக்குனராக முடியும் என சமகாலத்தில் நிரூபித்து காட்டியவர் கார்த்திக் சுப்புராஜ்.

இவர் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா இளமை துள்ளளாக இருந்தது. இவரின் திறமையை பார்த்த ரஜினி பேட்ட படத்தை இயக்க வாய்ப்பளித்தார்.கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி பல்வேறு படங்கள் எடுத்து வருகிறார்.

தற்போது இவரது இயக்கத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெளியானது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா என மாஸ் நடிகர்கள் அனைவரும் நடித்திருந்தனர். இந்த படம் வசூல் ரீதியாகவும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஒடிடியில் ரிலீஸானது. இதனையடுத்து ஜிகர்தண்டா படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த படத்தில் பாலிவுட் பிரபல நடிகர் க்ளிண்ட் ஈஸ்வுட்டின் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இதில் கதாநாயகனாக நடித்த ராகவா லாரன்ஸ், கிளிண்ட் ஈஸ்வுட்டின் தீவிர ரசிகராக நடித்திருப்பார். படம் நெடுங்களிலும் ஈஸ்ட்வுட்டின் பெயர் ஒலித்து கொண்டே இருக்கும்.

இந்நிலையில் எக்ஸ் தளத்தில் ரசிகர் ஒருவர், “இந்தியாவிலிருந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்கிற தமிழ் படத்தை எடுத்திருக்கிறோம். நெட்பிளிக்ஸில் இருக்கிறது. படம் முழுக்க உங்கள் பங்களிப்பைக் காட்சிப்படுத்தியிருக்கிறோம். அனிமேஷன் காட்சிகளில் உங்களின் இளம் வயதைக் காட்டியிருக்கிறோம். வாய்ப்பு கிடைக்கும்போது கண்டிப்பாக இப்படத்தைப் பாருங்கள்” எனக் கூறி க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தை டேக் செய்திருந்தார்.

இதற்கு கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் டிவிட்டர் பக்கத்தில் இருந்து வந்த பதிலில், இப்படத்தைப் பற்றி கிளின்ட் கேள்விப்பட்டார். அவர் தனது புதிய படத்தை (Juror 2) முடித்தவுடன் இப்படத்தைப் பார்ப்பார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை பார்த்து மகிழ்ச்சியடைந்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், லெஜெண்ட் நடிகரான க்ளின்ட் ஈஸ்ட்வுட், 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தைப் பற்றி கேள்விப்பட்டதும், அதை பார்க்கப்போவதாகச் சொல்வதும் கனவில் நடப்பதைப்போல் இருக்கிறது. இப்படம் இந்தியாவில் உள்ள அவரது மில்லியன் கணக்கான ரசிகர்கள் சார்பாக அவருக்கு, நான் டெடிகேட் செய்வது.

படத்தைப் பார்த்துவிட்டு அவர் என்ன நினைப்போகிறார் என்பதைத் தெரிந்துகொள்ளவதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். ட்விட்டரில் உள்ள அனைத்து 'ஜிகர்தண்டா' ரசிகர்களும் சேர்ந்துதான் இப்படத்தை அவரின் கவனத்திற்குக் கொண்டு சேர்த்துள்ளீர்கள். ஆசிர்வதிக்கப்பட்டதைப் போல நான் உணர்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com