அலுத்துப்போச்சே சாமி! எத்தனை முறைதான் இதையே பார்ப்பது? கேட்பது? ஸ்ஸ்ஸ்ஸ்..!

Tamil cinema
Tamil cinema
Published on

தமிழ் சினிமாக்களில் காணப்படும் காட்சிகள், பேசப்படும் வசனங்கள்...

  • பாசம் மிக்க தாய் தன் மகன் விரும்பும் பெண்ணை அழைத்து வந்தால் ஒலிக்கும் வசனம்:
    "மகாலட்சுமி மாதிரி இருக்கா..!"
    உடனே அந்த பெண் சொல்லி வைத்தார் போல அந்த அம்மாள் காலில் வணங்க முற்படும் முன்பு, அவளை அணைத்துக் கொள்வாள் ஹீரோவின் தாய்..!

  • ரிசல்ட் வரும் சீனில் ஏழை ஹீரோ பெரும்பாலும் மாகாணத்தில் முதல் மாணவனாக தான் பாஸ் செய்து இருப்பான்.

  • கதாநாயகனோ அல்லது கதாநாயகியோ விரும்பியவரை திருமணம் செய்ய கூடாது என்று தடுக்க பொதுவாக அவர்களின் தந்தை உயிருக்கு போரடிக் கொண்டு இருக்கும் காட்சி கை கொடுக்கும்.

  • அவரை பார்க்க வரும் டாக்டர் கண்ணாடி அணிந்துக் கொண்டு இருப்பார்.

  • கதாநாயகனை தனியாக அழைத்து சென்று கண்ணாடியை கழற்றி வைத்துக் கொண்டு உரையாடும் காட்சி மறக்காமல் இடம் பெறும்.

  • "கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். அதிர்ச்சி அடைய கூடிய செய்திகள் அவர் காதில் விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்," போன்ற அட்வைஸ் இடம் பெறும்.

  • உடன் கதாநாயகன் டாக்டரின் கை பையையோ, ப்ரீப் கேஸையோ எடுத்து செல்லும் காட்சி கட்டாயம் இருக்கும்.

  • சினிமாவில் கோர்ட் சீன் வந்தால் நீதிபதி ஒரு முறையாவது மேஜை மீது இருக்கும் சுத்தியலால் மூன்று தடவை தட்டி உடன் , 'சைலன்ஸ் சைலன்ஸ்!' என்று கூறும் காட்சி இருக்கும்.

  • அதே போல் வாதடும் வக்கீல் நடுவில் கூறுவார், "ஒரு நிரபராதி கூட தண்டிக்கப் பட கூடாது!" போன்ற அடிப்படையில் வசனங்கள் பேசப் படும்.

  • கல்லூரி வகுப்பு காட்சிகளில் பல படங்களில் ஒலிக்கும் வசனம் இது a + b whole square = a square , b square , 2 ab..

  • மனசாட்சி வெளியே வந்து எதிரிலிருந்து அறிவுரை கூறும் காட்சிகளும் தலை காட்டும்.

  • அந்த கால படங்களில் எழுதப்படும் கடிதங்களை எழுதியவர் அந்த கடிதத்தில் தோன்றி படிக்கும் காட்சிகள் தோன்றி மறையும்.

இதையும் படியுங்கள்:
ஆயிரம் கோடி வசூல் தமிழ்படங்களுக்கு எட்டாக்கனியா? ஏன்?
Tamil cinema
  • படம் நகர கனவு சீன்களும், சண்டை காட்சிகளும் கை கொடுப்பதைப் போல உற்ற உறவினர்களும், நண்பர்களும் உதவுவார்களா என்பது சந்தேகம் தான்.

  • கதாநாயகி ஒரு இடத்தில் சோகமாக பாட ஆரம்பிக்க, அதே பாடலின் அடுத்த லைனையோ அதே வரியையோ வேறு எங்கோ வெகு தொலைதூரத்தில் உள்ள கதாநாயகன் அதே ஸ்டைலில் பாடுவது புரியாத புதிர் தான். இது தான் சினிமா.

  • ஒவ்வொரு வில்லனும் ஒரு டிரேட் மார்க் சிரிப்பு சிரித்தாக வேண்டும் என்பது எழுதப் படாத மரபு.

  • ஹீரோவிற்கு ஒரு காமெடியன் தோன்றி படம் முழுவதும் வியாபித்து இருப்பது பல படங்களில் காணப்படும்

  • இசை சில காட்சிகளில் ஒரே மாதிரி ஒலிக்கும். அந்த பின்னணி இசை கேட்கும் பொழுது வரப் போகும் காட்சி மகிழ்ச்சிகரமானதா, திகில் நிறைந்ததா, சோகமயமா என்ற கற்பனைக்கு சினிமா படம் பார்ப்பவர்கள் தயார் ஆகி விடுவார்கள்.

ஆக மொத்தம் பல படங்களில் இத்தகைய சூழ்நிலைகள் பெரும் பாலான தமிழ் சினிமாக்களில் இன்றியாமையாதவை ஆகிவிட்டன.

உங்களுக்கும் சலிச்சு போச்சா? புலம்பணுமா? போடுங்க கமென்டு...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com