

சமீப காலமாக ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்களில் பான் இந்தியாவை சார்ந்த பல்வேறு நடிகர்கள், ஒரு சில காட்சிகளில் தோன்றுவதை வழக்குமாக்குவதை இயக்குநர்கள் கடைபிடிக்கின்றனர். இறுதியாக வெளிவந்த ரஜினிகாந்தின் திரைப்படமான கூலி திரைப்படத்தில் கூட பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் , கன்னட நடிகர் உபேந்திரா , தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா , மலையாள நடிகர் சௌபின் சாகிர் ஆகியோர் நடித்திருந்தனர்.
இது திரைப்படங்களை தமிழ் மொழியில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் பிரபலப்படுத்துவதற்கு ஒரு டெக்னிக்காக பார்க்கப்படுகிறது. தற்போது இது ரஜினிகாந்த் திரைப்படங்களின் ஃபார்முலாவாக மாறியுள்ளது. ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாகத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் , கன்னட நடிகர் சிவராஜ்குமார் , தெலுங்கு நடிகர் சுனில் , ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் ஆகியோர் சிறப்பு தோற்றங்களில் நடித்திருந்தனர். திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெற்றது. அது தொடர்ந்து ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் ஒரு வலிமையான காட்சியில், ஏதேனும் ஒரு பிரபல பாலிவுட் நடிகரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது. போலீஸ் உயர் அதிகாரி வேடத்தில் ஷாருக்கானை நடிக்க வைக்க பட குழுவினர் முயற்சி செய்தனர். இந்த சிறப்பு தோற்றம் ஷாருக்கான் ஏற்கனவே நடித்திருந்த ஜவான் படத்தின் ஆசாத் ஐபிஎஸ் கதாபாத்திரத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்று பேசப்பட்டது. ஆனால் , ஷாருக்கான் சில காரணங்களால் இதிலிருந்து விலகியுள்ளார்.
ஜெயிலர் 2 படக் குழுவினர் முதலில் அப்ரோச் செய்வது என்னவோ, ஹிருத்திக் ரோஷனை தான். இதற்காக நீண்ட பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது , அந்தத் திட்டத்தில் ஷாருக்கான் நடிக்க வைக்க முயற்சி செய்திருந்தனர். ஒரு கட்டத்தில் ஹிருத்திக் ரோஷனும் எந்த ஒரு பதிலும் கூறாததால் அடுத்ததாக சல்மான் கான் அல்லது வேறு நடிகர்களை அடிக்க வைக்கலாமா என்று படக் குழுவினர் யோசித்தனர்.
அதன் பின்னர் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். ஏற்கனவே ஜெயிலர் முதல் பாகத்தில் பாலகிருஷ்ணாவை பிரதிபலிப்பது போல சுனில் கதாபாத்திரம் வடிவமைக்கப் பட்டிருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இரண்டாம் பாகத்தில் நேரடியாகவே பாலகிருஷ்ணா நடிப்பதாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் , பாலகிருஷ்ணா தற்போது இந்த திட்டத்தில் இல்லை என்று தெரிகிறது.
தற்போது ஹிருத்திக் ரோஷன் ஜெயிலர் 2 வில் நடிக்க இருப்பதாக வட இந்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ஹிருத்திக் நடிக்க உள்ள அந்த கதாபாத்திரம் கதைக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கதாபாத்திரத்திற்கு வலிமையை கூட்ட சிறப்பான பின்னணி இசையையும் அமைக்க உள்ளனர்.
பொதுவாக ஹிருத்திக் ரோஷன் ஹிந்தி தவிர மாற்று மொழி திரைப்படங்களில் நடித்ததில்லை. ரஜினியுடன் அவரது தொடர்பு 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்கியுள்ளது. பகவான் தாதா என்ற பாலிவுட் திரைப்படத்தில் ரஜினிகாந்தின் வளர்ப்பு மகன் வேடத்தில் சிறுவயதில் ஹிருத்திக் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிருத்திக் நடிக்கும் காட்சிகள் ஜூன் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சென்னையில் படமாக்கப்பட உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார் , அனிருத் இசையக்கிறார். இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன் , மோகன்லால் , மிதுன் சக்கரவர்த்தி , சிவராஜ் குமார் , SJ.சூர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.