ட்ரெண்டிங்கில் இருக்கும் ரித்திக் ரோஷனின் இரண்டு படங்கள்... ஏன் தெரியுமா?

HRITHIK ROSHAN FIGHTER
HRITHIK ROSHAN FIGHTER
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on: 

பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனின் War மற்றும் The fighter ஆகிய படங்கள், ஒரே நேரத்தில் X தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளன.

யாஷ் ராஜ் ஃபிலிம் யூனிவர்ஸின் ஆறாவது படமான War 2 படத்தின் அப்டேட் இன்று வெளியானது. இப்படத்தின் முதலாம் பாகத்தில் ரித்திக் ரோஷன் ஏஜென்ட் கபிர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். சித்தார்த் ஆனந்த இயக்கிய War 1 படம் 450 கோடி வசூல் செய்து பெரிய ஹிட் கொடுத்தது.

சல்மான் கான் நடித்து வெளியான Tiger 3 படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் போஸ்ட் க்ரெடிட் காட்சியில் சல்மான் கான், கத்ரீனா கைஃபுடன் ஏஜெண்ட் கபிர் ( ரித்திக் ரோஷன் ) இணைந்திருப்பார். அதிலிருந்தே war 2 படம் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் இன்று War 2 படத்தின் அப்டேட் வெளியானது. அயன் முகர்ஜி இயக்கும் இப்படம் 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தில் ஜூனியர் NTR நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகும் இவர் படத்தில் வில்லனாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் சித்தார்த் ஆனந்த இயக்கத்தில் ரித்திக் ரோஷன் நடித்த The fighter படத்தின் டீசர் டிசம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. ஆனால் சில காரணங்களால் படத்தின் வெளியீட்டு தேதி அடுத்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த படத்தின் ப்ரொமோஷன் வேலைகள் 50 நாட்கள் நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.இப்படத்தில் ரித்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோனை ஒன்றாகப் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.இந்நிலையில் War மற்றும் The fighter படம் X தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com