சாதனை படைத்து வரும் ஹிருத்திக் ரோஷனின் ஃபைட்டர்! 2 நாளில் 100 கோடி வசூல்!

Fighter 2
Fighter 2

ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் 2024 குடியரசு தினத்தை ஒட்டி வெளியான ஃபைட்டர் படம் 2 நாட்களில் 100 கோடி வசூலை பெற்றுள்ளது. இது அவரது 14வது 100 கோடி வசூல் செய்த படமாகும். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஹிருத்திக்கின் வலுவான டயலாக்ஸ் மற்றும் சக்திவாய்ந்த நடிப்பின் மூலம் தேசபக்தி மிகுந்த படமாக உருவான ஃபைட்டர் ரசிகர்களை ஈர்த்துள்ளது.

வார் (2019) படத்திற்கு பிறகு ஒரே நாளில் 40 கோடிகளைத் தொட்ட ஹிருத்திக் ரோஷனின் 2வது படமாக ஃபைட்டர் மாறி உள்ளது.மேலும் இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் படம் வசூல் வேட்டை செய்து வருகிறது.

இப்படம் இப்போது ஆஸ்திரேலியாவில் ஹிருத்திக் ரோஷனின் அதிக வசூல் செய்த படமாக மாற உள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளியான பதான் படத்திற்கு பிறகு, குடியரசு தினத்தில் வெளியாகி அதிக வசூல் செய்த 2வது படமாக ஃபைட்டர் இடம் பெற்றுள்ளது.

இப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த ஹிருத்திக்கின் தொடர்ச்சியான 10வது படம் ஆகும். 2000ஆம் காலகட்டத்தில் 100 கோடி ரூபாய் வசூல் செய்வது பெரிய சாதனையாகும். ஆனால் இந்த சாதனையை ஹிருத்திக்ரோஷன் இன்றளவும் செய்து வருகிறார். இவர் நடிப்பில் உலகளவில் ரூ.100 கோடி வசூல் செய்த படங்களின் லிஸ்ட்:

 1. கபி குஷி கபி கம்

 2. க்ரிஷ்

 3. தூம் 2

 4. ஜோதா அக்பர்

 5. ஜிந்தகி நா மிலேகி டோபரா

 6. அக்னிபத்

 7. க்ரிஷ் 3

 8. பேங் பேங்

 9. மொகஞ்சதாரோ

 10. காபில்

 11. சூப்பர் 30

 12. போர்

 13. விக்ரம் வேதா

 14. போராளி

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைத்து வரும் ஃபைட்டர் படம் 2024ல் அதிக வசூல் செய்த ஹிந்தி படங்களில் முதல் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com