பொன்னியின் செல்வன் பிரஸ்மீட்டில் செய்தியாளர் கேட்ட தாறுமாறான கேள்விகளுக்கு தரமாக பதிலளித்தார் டைரக்டர் மணிரத்னம்.
கல்கி அவர்களின் காவிய புதினமான பொன்னியின் செல்வன் தற்போது தமிழின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் அவர்களால் திரைப் படமாக்கபட்டு வருவது அனைவரும் அறிந்த தகவல். அதன் ஒவ்வொரு செய்தி வெளியீட்டின் போதும் பரபரப்பாக பேசப்படுவது வாடிக்கையாகிவிட்டது. பொன்னியின் செல்வன் குறித்து கசியும் சிறு தகவலுமே வைரலாகி போகின்றது.
தற்போது பொன்னியின் செல்வன் செய்தியாளர் சந்திப்பின் போது நிருபர்கள் பலர் சராமரியாக கேள்விகளை வீச , பதறாமல் நிதானமாகவும்,சலிக்காமலும் பதிலளித்தார் மணிரத்னம்.
அதில் மணிரத்னம் சொல்லியதாவது "கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தற்போதும் விற்பனையில் முதலிடம் வகித்து வரும் ஒன்று. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை முதல்முறை படிக்கும் போதே அது திரைப்படத்திற்கான அருமையான நாவல் என்றே எனக்கு தோன்றியது.
கல்கி அவர்கள் நாவல் எழுதுகையிலேயே ஒரு முழு திரைபடத்திற்கான அத்தனை தகவல்களையும், விஷயங்களையும் அதில் குறிப்பிட்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. அவர் அதில் எழுதிய கதையின் சாரம் சற்றும் குறையாமலேயே முழு திரைப்படத்தை எடுக்க முயன்றிருக்கிறேன்.
திரைப்படத்தில் நாவலில் உள்ள அத்துணை விஷயங்களும் நிச்சயமாக இடம் பெற்றிருக்கும். பொன்னியின் செல்வன் கதையை நிறைய பேர், நிறைய முறை படித்திருக்கிறார்கள். பலருக்கும் கதை குறித்தும், அடுத்து என்ன நடக்கும் என்றும் தெரியுமளவுக்கு திரும்ப திரும்ப படித்திருக்கிறார்கள் .
இன்றளவுக்கும் விற்பனையில் முதலிடத்தை பிடித்திருக்கும் அந்த கதையை அனைவரையும் திருப்தி படுத்தும் விதத்தில் எடுத்திருக்கிறேன். படம் பாருங்கள்! நிச்சயமாக நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து விஷயங்களும், கல்கி அவர்கள் எழுதிய அனைத்து சிறப்பு அம்சங்களும் படத்தில் இருக்கும்" என பேசியுள்ளார் டைரக்டர் மணிரத்னம்.