தமிழ் சினிமாவில் வெயில், காவியத்தலைவன் போன்ற படங்களை இயக்கிய வசந்தபாலன் இவரை வில்லனாக காட்டியதற்கு மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.
சினிமா மூலம் சாதி, மதம், இனம், மொழி போன்றவற்றை குழந்தைகள்கூட கற்றுக்கொள்கிறார்கள். சினிமா பல வழிகளில் சமுதாயத்தில் பெரிய மாற்றத்தைக் கொடுக்கிறது. மக்களிடையே பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. ஆகையால், இயக்குநருக்கு ஒரு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது என்றே கூறலாம்.
அந்தவகையில் வெயில், அங்காடித்தெரு, காவியத்தலைவன், ஜெயில் போன்ற படங்களை இயக்கிய வசந்த பாலன் ஒரு விஷயம் குறித்து பேசியிருக்கிறார்.
“தமிழ் சினிமாவில் பா.ரஞ்சித் வருகைக்கு முன்பாக சாதி, தலித் மக்களை பற்றிய பார்வை வேறு ஆக இருந்தது.
வெயில் படத்தில் பன்றி மேய்ப்பவரை வில்லனாக காட்டியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன். சிறுபான்மையினரை மூன்றாம் பாலினத்தவரை நாம் தவறாக காட்டி விடக்கூடாது என்று பா. ரஞ்சித் அவருடைய படங்களின் மூலமாக நமக்கு சுட்டிக்காட்டி உள்ளார்” என்று பேசியிருந்தார்.
சினிமா என்பது ஒரு காலகட்டத்திற்கு ஏற்ப இயக்குநர்களின் ஐடியாலஜிக்கேற்ப பரிணாம வளர்ச்சி அடையும். முதலில் சாஜி மதங்களை வேறு ஒரு கோணலில் காண்பித்து வந்தார்கள்.
இப்போது பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றோர்களும் சாதி குறித்துதான் படங்களை எடுக்கிறார்கள். காண்பிக்கும் விதம் மாறினாலும், சொல்ல வரும் விஷயம் ஒன்றாகதான் அப்போதிலிருந்தே இருந்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட சாதி மக்கள் சமுதாயத்தில் வாழ்வதற்கே எப்படி கஷ்டப்பட்டார்கள் என்றுதான் அதிகம் சொல்லப்படுகிறது.
இதன்மூலம் இப்போது இளைஞர்கள் சுதாரித்துக்கொண்டு அனைவரும் ஒன்றுதான் என்று முழுமையாக மாறிவிட்டார்கள். இப்படி மாறியதற்கு சினிமா ஒரு காரணம்.
இதைதான் வசந்தபாலனும் கூறியிருக்கிறார். வெயில் படத்தில் வில்லனாக பன்றி மேய்ப்பவரை காண்பித்தது குறித்துதான் தற்போது பேசியிருக்கிறார்.
பரத், பசுபதி, பாவனா ஆகியோர் நடிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியான படம் வெயில். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இன்றளவும் இந்தப் பாடல்களுக்கு வரவேற்பு அதிகம். அதேபோல் படமும் நல்ல வரவேற்பை பெற்றது.