6 மணிக்கு மேல் நடிக்க வர மாட்டேன் என்று கூறிவிட்டேன் – கே. ஆர். விஜயா!

K.R.Vijaya
K.R.Vijaya

5 தலைமுறை நடிகர்களுடன் நடித்த கே.ஆர்.விஜயா, 6 மணிக்கு மேல் நடிக்க வர மாட்டேன் என்று கூறிவிட்டாராம். என்னாவா இருக்கும்?

1963ம் ஆண்டு தனது நடிப்பை தொடங்கிய கே.ஆர்.விஜயா இப்போது கிடைக்கும் படங்களில் நடிக்கிறார். படங்களை தாண்டி தமிழ், தெலுங்கு, மலையாளம் என 20க்கும் மேற்பட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.

1966ம் ஆண்டு சுதர்சன் வேலாயுதம் நாயர் என்பவரை திருமணம் செய்துக்கொண்ட இவருக்கு ஹேமலதா என்ற ஒரு மகள் இருக்கிறார். ஆனால் வேலாயுதம் அவர்கள் மார்ச் 26ம் தேதி 2016ம் ஆண்டு உயிரிழந்தார்.

இவர் சொந்தமாக சுதர்சன் சிட்பண்ட்ஸ் நிதி நிறுவனம், சென்னை மற்றும் பெங்களூருவில் பல நட்சத்திர ஓட்டல்களும் வேலாயுதம் நாயருக்கு இருந்துள்ளன. மேலும் சொந்தமாக கப்பல், விமானமும் அவருக்கு இருந்தது.

ஏராளமான தொழில் நிறுவனங்களையும் திறம்பட நடத்திருக்கிறார். அந்தவகையில், கே.ஆர்.விஜயா சமீபத்தில் ஒரு யூட்யூப் சேனலுக்கு அளித்தப் பேட்டியில் அவரது கணவன் குறித்து பேசினார்.

“நானே கல்யாணத்துக்கு பிறகு நடிக்க வேண்டாம் என்று இருந்தேன். ஆனால், என் கணவர், ‘ நீ சோம்பேறியாக இருக்காத. மூனு மாசம் ஆச்சு, போ, போ, வேலைய பாரு’ என்றார். கடைசியா சாகும்போதும் கூட, ‘ நீ ஹேப்பியா இருக்கனும், பூ பொட்டுலாம் வச்சுக்கனும், தொழில விட்டுக்கொடுக்க கூடாது. உன்னால முடியும் வர வேலைப் பாரு’ ன்னு சொன்னாரு.  

இதையும் படியுங்கள்:
நானும் ஆர்யாவும் உயிர்தப்ப ஓடினோம்! – ஒளிப்பதிவாளர் ஆர்தர்!
K.R.Vijaya

குழந்தைப் பிறந்ததற்கு பிறகு என்ன செய்வது என்று கேட்டேன். அதற்கு அவர், ‘ஏன்.. மற்ற பொண்ணுங்களாம் வேலைக்கு போகலையா? வேணும்னா ஆறு மணிக்குள் வீட்டுக்கு வந்து குழந்தைங்கள பாத்துக்கோ. நடிக்கப் போற இடத்துல.. இயக்குனர்ட்ட கண்டிப்பா சொல்லிரு’ ன்னு சொன்னாரு. நானும் அதேபோல்தான் சொன்னேன். போகப் போக எனக்கு ஏற்றமாதிரி படப்பிடிப்பில் மாற்றங்கள் செய்தார்கள். எனக்காக எல்லாரும் அட்ஜஸ்ட் செய்துக்கொண்டார்கள்.“ என்று பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com