“கெட்டவனாக நடிக்கவே விரும்புகிறேன்…” – கல்கி பட நிகழ்ச்சியில் பேசிய கமல்!

Kamal hassan
Kamal hassan

கல்கி 2898 AD படத்தின் ப்ரி ரிலீஸ் ஈவன்ட்டில், கமல்ஹாசன் கெட்டவனாக நடிக்கவே விரும்புகிறேன் என்று பேசியுள்ளதால், இயக்குனர்களின் கவனம் அவர் பக்கம் திரும்பியுள்ளது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ படமாக உருவாகி வரும் கல்கி படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஆகியோர் நடித்துள்ளனர். இது சூப்பர் ஹீரோ படமாக அதிக பட்ஜட்டில் உருவாகி வருகிறது என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. கலியுகத்தில் கிருஷ்ணன் அவதாரத்தைத் தழுவியும் இந்தப் படத்தை எடுத்திருப்பதாக செய்திகள் வந்தன.  

600 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவான இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். அறிவியல், புராணம் கலந்த படமாக உருவாகி வரும் இப்படம், இந்த மாதம் 27ம் தேதி வெளியாகவுள்ளது.

தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளதால், படக்குழு ப்ரோமோஷனுக்காக மட்டும் பல கோடிகளை செலவு செய்துள்ளது.

கல்கி 2898 AD' படத்தில், மெகாஸ்டார் அமிதாப் பச்சன் அஸ்வத்தாமா கேரக்டரில் நடித்துள்ளார். இதற்கான படப்பிடிப்பு, மத்தியப் பிரதேசத்தில் உள்ள நெமாவார், நர்மதா காட் என்ற இடத்தில் நடைபெற்றது. இப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுவரை அவரது கதாபாத்திரம் பற்றிய எந்த தகவலையும் படக்குழு வெளியிடவில்லை.

ஆனால், கமல் வில்லன் கதாபாத்திரத்தில் எப்படி அட்டகாசமாக நடித்திருப்பார் என்று தமிழ் மக்களுக்கு நன்றாகவே தெரியும். அதற்கு ஆளவந்தான் படமே சாட்சி. ஆகையால், முழு எதிர்பார்ப்பும் தற்போது கமல் கதாபாத்திரத்திற்குதான் உள்ளது.

இந்நிலையில் 'கல்கி 2898 AD' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி மும்பையில் கோலாகலமாக நேற்று நடைபெற்றது. அதில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ராணா டக்குபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 'கல்கி 2898 AD' டிரைலர் திரையிடப்பட்டது.

இதையும் படியுங்கள்:
திரைக்கு வரக் காத்திருக்கும் ராஷ்மிகாவின் 2 படங்கள்: ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
Kamal hassan

இதையடுத்து பேசிய கமல்ஹாசன், இந்த படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரம் கொடுத்ததற்காக இயக்குநரை பாராட்டினார். மேலும், நான் எப்போதும் கெட்ட மனிதனாக நடிக்கவே விரும்புவேன்.

ஏனென்றால் கெட்ட மனிதர்கள் எல்லா நல்ல காரியங்களையும் படத்தில் செய்வார்கள் என்றார். இந்தப் படத்தில் அப்படி ஒரு கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்த இயக்குநருக்கு நன்றி, அது ஒரு அற்புதமான அனுபவமாக மாறி உள்ளது என்றார். மேலும் இந்தப் படத்தின் முதல் டிக்கெட் கமல்ஹாசனுக்கே கொடுக்கப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com