சினிமாவை விட்டே போய்விடலாம்னு இருந்தேன் – விடாமுயற்சி நடிகை!

Vidamuyarchi
Vidamuyarchi
Published on

ஒருகாலத்தில் சினிமா உலகம் எனக்கு புதிதாக இருந்ததால், சினிமாவை விட்டு போய்விடலாம் என்றே நினைத்துவிட்டேன் என்று பேசியிருக்கிறார் விடாமுயற்சி நடிகை.

இரண்டு வருடங்களாக அப்ப வரும் இப்ப வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த விடாமுயற்சி திரைப்படம் ஒருவழியாக திரைக்கு வந்தது. அஜித் ரசிகர்களை கையிலேயே பிடிக்க முடியவில்லை. இருந்தாலும், படம் பார்த்த சினிமா ரசிகர்கள் படம் அவ்வளவாக இல்லை என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

அஜித் ரசிகர்கள்கூட கவலையில் உள்ளனர். இதனால் சமூக வலைதளங்கள் எங்கும் விடாமுயற்சி படத்தின் மீம்ஸ் தான். இப்படியான நிலையில், விடாமுயற்சி படத்தில் நடித்த நடிகை ஒருவர் சினிமாவுக்கு வந்த புதிதில் தனக்கு இப்படிதான் தோன்றியது என்று பேசியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் பாரம்பரிய ஆடைகள்: கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு!
Vidamuyarchi

ஆம்! விடாமுயற்சி படத்தில் அஜித், த்ரிஷா தவிர பல முன்னணி நடிகை நடிகர்கள் நடித்திருக்கின்றனர். அதில் ஒருவர்தான் ரெஜினா. ரெஜினா சிறு வயதில் படங்கள் நடித்திருந்தாலும், சிவகார்த்திகேயனுடன் நடித்த 'கேடி பில்லா கிள்ளாடி ரங்கா' படத்தின்மூலம்தான் தமிழ் ரசிகர்கள் மனதில் பதிந்தார். பின்னர் பல படங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்தார். குறிப்பாக பேய் படங்களில் கெத்தான கதாபாத்திரங்களில் நடித்து அதில் தனித்துவமாக விளங்கினார்.

அந்தவகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம்தான் விடாமுயற்சி. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துக்கொண்ட அவர், தனது சினிமா பயணத்தை குறித்து பேசியிருக்கிறார். “நான் மிகவும் இளம் வயதாக அதாவது 14 வயதிலே சினிமாவுக்கு வந்துவிட்டேன். அப்போது இந்த சினிமா துறை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. ஒரு குழந்தை போல தான் சினிமாத்துறைக்கு நான் வந்தேன். இது இவ்வளவு பெரிய உலகம் இதில் எப்படி ட்ராவல் பண்ண வேண்டும் என்று கூட எனக்கு தெரியாது.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் பாரம்பரிய ஆடைகள்: கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு!
Vidamuyarchi

சில சமயங்களில் 2016 காலகட்டத்தில் நான் சினிமாவை விட்டே போய்விடலாம் என்ற ஒரு எண்ணம் எனக்கு வந்துவிட்டது. அந்த அளவுக்கு எனக்கு இந்த துறையின் மீதும் இந்த தொழில் மீதும் பெரிதாக புரிதல் இல்லை. ஆனால், இப்போது நான் இவ்வளவு உயரத்தை எட்டிப் பிடிப்பேன் என்று நான் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை.” என்று பேசினார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com