நடிகை சோனா நான் எவ்வளவு தொகை கொடுத்தாலும், வடிவேலுவுடன் மட்டும் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
நடிகை சோனா 2001ம் ஆண்டு பூவெல்லாம் உன் வாசம் படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் 2002இல் "மிஸ் தமிழ்நாடு" பட்டத்தை வென்றுள்ளார். அடுத்து விஜயுடன் ஷாஜஹான் படத்தில் நடித்தார். தெலுங்கு மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
2008ம் ஆண்டு வெளியான பத்து பத்து என்ற படத்தின்மூலம் ஹீரோயினாக நடித்தார். 2010-ம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளியான கனிமொழி என்ற படத்தை தயாரித்து தயாரிப்பாளராகவும் மாறினார்.
ஆனால் அவருக்கு தயாரிப்பாளர் பணி தோல்வியையே கொடுத்ததால், மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது அவருடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களின் பதிவாக உருவாகும் 'ஸ்மோக்' என்கிற வெப் சீரிஸை இயக்கி இயக்குநராகவும் அறிமுகமாகி இருக்கிறார்.
இந்த வெப் சீரிஸின் ப்ரோமோஷனில் கலந்துக்கொண்ட சோனா, வடிவேலு குறித்து கேட்டதற்கு ஒரு பதிலை அளித்திருக்கிறார்.
அதாவது, “ நடிகர் வடிவேலுடன் நடிப்பதற்கு பதிலாக நான் பிச்சை கூட எடுப்பேன். எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும், நான் அவருடன் நடிக்க மாட்டேன். நான் அவருடன் ஒரு படம் நடித்து முடித்த பிறகு, தொடர்ந்து 12 பட வாய்ப்புகளில் அவருடன் சேர்ந்து நடிக்க அழைக்கப்பட்டேன். ஆனால், நான் அத்தனையும் உதறித் தள்ளிவிட்டேன். சினிமா வாழ்க்கையில் இப்படிப்பட்ட பல பிரச்சனைகளை சந்தித்தாலும், அனைவருமே வடிவேலுவை கழுவி கழுவிதான் ஊற்றுவார்கள்.” என்று பேசியிருக்கிறார்.
வடிவேலு சினிமா துறையில் தனிக்காட்டு ராஜாவாக ஒரு காலத்தில் காமெடியில் கலக்கி வந்தார். பல காலமாக நடிப்பில் தலைக்காட்டாமல் இருந்த வடிவேலு இணையத்தில் மட்டும் எப்போதுமே கலக்கிக்கொண்டு வந்தார். வடிவேலின் மீம்ஸ், ட்ரோல்ஸ் அனைத்துமே தனி இடத்தைப் பிடித்து இணையத்தில் நிலையாக ஆட்சி செய்து வந்தது. அதேபோல் அவ்வப்போது காவலன், மெர்சல் போன்ற படங்களில் நடித்தாலும் அவ்வளவாக க்ளிக் ஆகவில்லை என்றே கூற வேண்டும். ஆனால், கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மாமன்னன் படம் நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனால், சினிமா துறையினர் பலரும் அவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்துதான் வருகின்றனர். ரசிகர்களும் அவ்வபோது அவரை ஆட்டிட்யூட் என்றே விமர்சிப்பர்.