இனி என் படத்தில் நடிக்க அவரை கூப்பிட மாட்டேன் - மணிரத்னம்!

Maniratnam
Maniratnam
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

இயக்குநர் மணிரத்னம், இனி தான் இயக்கும் எந்தப் படத்திலும் ஒரு முன்னணி நடிகரை நடிக்க கூப்பிட மாட்டேன் என்று கூறியிருக்கிறாராம். அது யார், ஏன் தெரியுமா?

80களிலிருந்து இப்போதுவரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு இயக்குநர் மணிரத்னம். இவர் படங்களின் கதாநாயகர்கள் மற்றும் நாயகிகள் தனியாக தெரிவார்கள். அதாவது, யார் இயக்கிய படம் என்று தெரியாவிட்டாலும் கூட, அவரது கதாபாத்திரங்களைப் பார்த்தே இது மணிரதனம் படம் என்பதைக் கண்டறிந்துவிடலாம். அந்தளவு தன்னுடைய கதாபாத்திரங்களை தனித்துவமாக காண்பிப்பவர் மணிரத்னம். இவரின் படங்களுக்கு நாயகி, நாயகன் ஆக வேண்டும் என்பது பல நடிகர்களின் கனவாகும்.

அந்தவகையில் மணிரத்னம் ஒரு நடிகரை நடிக்க அழைத்து, அவர் வரவில்லை என்று கூறியதுதான் ஆச்சர்யமே. மணிரத்னம் கோபத்தில் இனி நான் எடுக்கும் எந்தப் படத்திலும் அவரை அழைக்கமாட்டேன் என்று கூறியதும்தான் பெரிய விஷயமே.

90ஸ் ஹீரோக்களில் மிகவும் புகழ்பெற்றவர் ஸ்ரீகாந்த். மணிரத்னம் இயக்கத்தில் ஆயுத எழுத்து படம் உருவான நேரம் அது. அப்போது சித்தார்த் கதாபாத்திரத்தில் ஸ்ரீகாந்த் நடிக்கவிருந்தார். மணிரத்னத்திடம் ஸ்ரீகாந்தே அந்த கதாபாத்திரத்தைக் கேட்டு வாங்கினார்.

ஆனால், சூர்யா மற்றும் சித்தார்த் கதாபாத்திரங்களின் டெஸ்ட் லுக் நடைபெற்ற நாளன்று, ஸ்ரீகாந்த் ஒரு Fire accident-ல் மாட்டிக்கொண்டார். அப்போது முகமெல்லாம் எரிந்து ஆஸ்பத்திரியில் அசைவின்றி படுக்கும் சூழல் வந்தது. அவர் குணமடைந்து வர சில நாட்கள் ஆனது. அதுவரை மணிரத்னம் காத்துக்கொண்டிருந்தார். ஆனால், ஸ்ரீகாந்த் திரும்பி வந்து அட்வான்ஸை அவரிடம் திருப்பி அளித்துவிட்டு இப்படத்தில் நடிக்க வாய்ப்பில்லை என்று கூறிவிட்டாராம்.

அப்படி இவர் கூறியதும், இவ்வளவு நாள் நீங்கள் வரத்தான் காத்திருந்தோம். ஆனால், இப்படி சொல்கிறீர்களே. இனி நான் எடுக்கும் எந்தப் படத்திலும் உங்களை நடிக்க அழைக்கமாட்டேன் என்று மணிரத்னம் கூறிவிட்டாராம்.

இதையும் படியுங்கள்:
சர்தார் 2 ஷூட்டிங்கில் ஸ்டண்ட் கலைஞர் உயிரிழப்பு! எப்படி?
Maniratnam

ஸ்ரீகாந்த் இப்படி செய்தது பலருக்கும் பிடிக்கவில்லை. ஆனால், அவருக்கு ஏற்பட்ட சூழல் அப்படி. இவர் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருகிறார் என்று தெரிந்ததும், அப்போது ஒரு படத்தில் கம்மிட்டாகி நடித்துக்கொண்டிருந்த படத்தின் தயாரிப்பாளர், முழுமையாக இந்தப் படத்தையும், சைன் போட்டு தந்த அடுத்தப் படத்தையும் முடித்துவிட்டுதான் யார் படத்திலும் நடிக்க வேண்டும். அது மணிரத்னமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மிரட்டினாராம். அந்த சூழ்நிலையால்தான் ஸ்ரீகாந்த் ஆயுத எழுத்து படத்தில் நடிக்க முடியாமல் போனது.  

logo
Kalki Online
kalkionline.com