அவரு தட்டுனா வேற லெவல்... அத நான் பண்ணினா மக்கள் ஏத்துக்கமாட்டாங்க! மேடையில் பேசிய ரஜினி!

அவரு தட்டுனா வேற லெவல்... அத நான் பண்ணினா மக்கள் ஏத்துக்கமாட்டாங்க! மேடையில் பேசிய ரஜினி!
Published on

என்.டி. ராமாராவின் நூற்றாண்டு விழா நேற்று ஆந்திராவில் நடைபெற்ற நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

திரையுலகில், பல சாதனைகளைப் படைத்து, முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் என்.டி.ராமாராவ். இவர், 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளதோடு, மூன்று முறை தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் சினிமா இயக்குனராகவும் புகழ் பெற்று விளங்கினார்.

இந்நிலையில் நேற்று, என்.டி. ராமாராவின் நூற்றாண்டு விழா ஆந்திராவில் நடைபெற்றது. இதை அவரது மகனான நடிகர் பாலகிருஷ்ணா ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், என்.டி.ராமராவ் உடன் தனது நட்பு குறித்து பேசினார். அதைத் தொடர்ந்து அவரது மகன் மற்றும் பிரபல தெலுங்கு நடிகரான பால கிருஷ்ணா குறித்தும் பேசினார்.

அப்போது, சினிமாவில் சில விஷயங்களை நானோ, அமிதாப்போ, ஷாருக்கானோ செய்யமுடியாது. அதை பாலையா செய்துவிடுவார். அவர் ஒரு தட்டு தட்டினால் ஜீப் பல அடி தூரம் தள்ளிப்போகும். ஆனால், இதை ரஜினிகாந்தோ, அமிதாப்போ, ஷாருக்கானோ செய்தால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதை பாலையா செய்தால் மட்டுமே மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். காரணம் அவரை பாலையாவை மட்டும் மக்கள் பார்க்கவில்லை. என்டி ராமாராவாகவும் பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com