சென்னை வந்த இளையராஜா மகள் உடல்.. தி.நகரில் அஞ்சலிக்காக வைப்பு!

bhavatharini
bhavatharini

இலங்கையில் உயிரிழந்த இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணியின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது.

இசைஞானி இளையராஜாவின் ஒரே மகளான பவதாரிணி நேற்று காலமானார். தமிழ் சினிமாவில் தனித்துவமான குரலால் உலாவி வந்த பவதாரிணி 30க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தியுள்ளார்.

இசைஞானிகளில் வாரிசுகளான கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரிணி என மூவரும் இசை துறையில் சாதித்து வருகின்றனர் 47வயதாகும் பவதாரிணிக்கு திடீரென கல்லீரல் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து 6 மாத காலமாக அவர் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இவரின் உடல் தற்போது விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு சென்னை தி.நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நாளை பவதாரிணியின் உடல் அவரது தந்தையான இளையராஜாவின் சொந்த ஊரான தேனி பண்ணயபுரத்தில் அடக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளையராஜாவின் லோயர்கேம்ப் வீட்டின் ஓரம் தான், இளையராஜாவின் தாயார் சின்னத்தாயி, மனைவி ஜீவா ஆகியோர் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இவரது மகளையும் அங்கே தான் அடக்கம் செய்வார் என கூறப்படுகிறது.

சென்னையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த், சிவக்குமார், ராமராஜன் உள்ளிட்ட ஏராளமான திரைபிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com