Bhavadharini
Bhavadharini

இளையராஜாவின் மகள் காலமானார்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

Published on

இசைஞானி இளையராஜாவின் மகள் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

இசை என்று சொன்னதும் நம் நினைவுக்கு வருவது இளையராஜா தான். அப்படி இளையராஜாவின் வாரிசுகளாக யுவன், கார்த்திக், பவதாரணி என அனைவருமே இசை உலகத்தில் கொடி கட்டி வாழ்ந்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் இளையராஜாவின் ஒரே மகளான பவதாரிணி இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

பாடகி பவதாரிணி பாரதி படத்தில் மயில் போல பொண்ணு ஒண்ணு பாடல் பாடி தேசிய விருது வென்றுள்ளார். தனித்துவமான குரலை கொண்ட இவர் தனது தந்தை, சகோதரர்கள் இசையில் மட்டும் பாடல்களை பாடி வந்துள்ளார்.

சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படத்தில் கூட மெஹெருசைலா பாடலை பாடி அசத்தியிருப்பார். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பவதாரிணி கடந்த 6 மாதங்களாக சிகிக்சை பெற்று வருகிறார். ஆயுர்வேத சிகிச்சைகள் மேற்கொள்வதற்காக இலங்கை சென்ற அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இந்த சம்பவம் ஒட்டு மொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவரின் மறைவை தொடர்ந்து இளையராஜா மற்றும் அவர் குடும்பத்தினர் இலங்கை விரைந்துள்ளதாகவும், நாளை அவரின் உடல் சென்னை கொண்டு வரப்படும் எனவும் சொல்லப்படுகிறது. இளையராஜாவின் மகளும், யுவனின் சகோதரியான பவதாரினியின் மறைவுக்கு ஏராளமான திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com