தாய், பாட்டி அருகே துயிலுறங்கினார் பவதாரிணி.. இளையராஜா வீட்டில் நல்லடக்கம்!

இளையராஜா மகள்
இளையராஜா மகள்

பிரபல இசையமைப்பாளரின் மகள் பவதாரிணி உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவரின் உடல் இன்று பண்ணயபுரத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவிற்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளார். மூவரும் இசையுலகில் தந்தையை போலவே கொடிகட்டி பறந்து வருகின்றனர். இதுவரை தமிழ் சினிமாவில் 30க்கும் மேற்பட்ட பாடலை பாடியும், 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தும் தந்தைக்கு புகழ் சேர்த்தவர் பவதாரிணி.

இவருக்கு திடீரென கல்லீரல் புற்றுநோய் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 6 மாத காலமாகவே இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். எதார்த்தமாக இலங்கைக்கு கான்செர்ட் சென்ற இளையராஜாவிற்கு மகளின் இறப்பு பேரிடியாய் வந்தது.

இந்த நிலையில் நேற்று இலங்கையில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட பவதாரிணியின் உடல் சென்னை தி,நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் ஏராளமான திரைபிரபலங்கள் பங்கேற்று பவதாரிணியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து நேற்று இரவு அவரது உடல் இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்திற்கு கொண்டுவரப்பட்டது. இன்று அவருக்கு வேதங்கள் முழங்க இறுதி சடங்கு நடைபெற்றது. இதையடுத்து, சகோதர்களாகிய வெங்கட்பிரபு, யுவன், கார்த்திக் ஆகியோர் தோளில் சுமந்த படி சென்ற பவதாரிணி, இறுதியாக தாய், பாட்டி சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டார். ஏற்கனவே உயிரிழந்த தாயாரையும், மனைவியையும் இளையராஜா அவரது வீட்டிலேயே அடக்கம் செய்த நிலையில், தற்போது மகளையும் அங்கேயே அடக்கம் செய்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com