இசை(விஞ்)ஞானிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
இசைஞானி இளையராஜா எத்தனையோ மதிப்புமிக்க ரத்தினங்களை just like that நமக்கு அளித்துள்ளார். இவர் இசை மட்டும் தெரிந்த ஞானி அல்ல... இசை ரசிகர்களின் மன மெல்டிங் பாயின்ட்-ம் தெரிந்த இசை ‘விஞ்ஞானி’. அவர் இசையில், அவர் பாடிய பாடல்களைக் கேட்டால் நமக்குப் புரியும், எல்லாவித உணர்வுளும் அதில் இருக்கும் என்பது.
இதயக்கோவில் (1985): ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு ...தோப்போரமா இந்தப்பக்கம் குருவிக்கூடு...
கீதாஞ்சலி (1985): துள்ளி எழுந்தது பாட்டு,
சின்னக் குயிலிசை கேட்டு, சொல்லி கொடுத்தது காற்று உறவோடுதான்..
கீதாஞ்சலி (1985): ஒரு ஜீவன் அழைத்தது,
ஒரு ஜீவன் துடித்தது, இனி எனக்காக அழ வேண்டாம்...
இங்கு கண்ணீரும் விட வேண்டாம்...
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்...
சக்களத்தி (1979): வாட(டை) வாட்டுது
ஒரு போர்வை கேக்குது இது ராத்திரி நேரமடி..
அவதாரம் (1995): தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல... திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல!
அலைகள் ஓய்வதில்லை (1981): காதல் ஓவியம்... பாடும் காவியம்... தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்... என்றென்றும் ஆனந்தம் பேரின்பம்..
மலையூர் மம்பட்டியன் (1983): சின்னப்பொண்ணு சேல..
செண்பகப்பூ போல... இங்கே மாராப்பு மயிலே நீ போ வேணாம் வீராப்பு.
நாயகன் (1987): நிலா அது வானத்து மேலே...
கவிக்குயில் (1977): சின்னக் கண்ணன் அழைக்கிறான்...
முதல் மரியாதை (1985): அந்த நிலாவத்தான்
நான் கையில புடிச்சேன்
என் ராசாத்திக்காக…
கடலோரக் கவிதைகள் (1986): அடி ஆத்தாடி இள மனசொன்னு
றெக்ககட்டி பறக்குது சரிதானா? அடி அம்மாடி ஒரு அலைவந்து அடிக்குது மனசுக்குள்ள அதுதானா...?
சேது (2014): எங்கே செல்லும் எந்தன் பாதை...
தர்மபத்தினி (1986):
நான் தேடும் செவ்வந்திப் பூவிது,
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது,
பூவோ இது வாசம் போவோம்
இனி காதல் தேசம்....
அறுவடை நாள் (1986): தேவனின் கோவில் மூடிய நேரம்,
நான் என்ன கேட்பேன் தெய்வமே,
இன்று என் ஜீவன் தேயுதே என் மனம் ஏனோ சாயுதே...
தாய் மூகாம்பிகை (1982): ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ...