"அன்பு மகளே" தேவதையை இழந்த தந்தையின் வேதனை பதிவு!

ilayaraja
ilayaraja

உலகமே இசையாய் கொண்டாடப்படும் ஒரு ஜாம்பவானின் வீட்டில் ஒரு துயர சம்பவம் நேர்ந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

என்னதான் குழந்தைகள் என்று பொதுவாக பார்த்தாலும், பலரது குடும்பத்தில் தந்தைகளுக்கு மகள்களே செல்லம், மகள்களுக்கு அப்பாக்களே தெய்வம். தங்கமீன்கள் படத்தில் வரும் பாடலில் மகள்களை பெற்ற அப்பாக்கள் பாக்கியசாலிகள் என்ற வரிகளை போன்று இளையராஜவும் மகளால் ஒரு அதிர்ஷ்டசாலிதான்.

எத்தனையோ விருதுகள், அங்கீகாரம் கிடைத்தாலும் மகளின் அந்த ஒற்றை சிரிப்பு தான் அப்பாக்களின் மிக சிறந்த மகிழ்ச்சியாகும். அப்படி இசைஞானி இளையராஜாவுக்கு 2 மகன்கள் இருந்தாலும், பவதாரிணி என்ற ஒரு தேவதை நெஞ்சோடு பதிந்தவள். ஏற்கனவே தாய், மனைவி என இரு பெண்களை வாழ்க்கையில் இழந்த இளையராஜா, மகளையே தன் தாயாக பார்த்திருப்பார். எதார்த்தமான வாழ்க்கையில் அதுவே தந்தையின் நம்பிக்கையாக இருக்கும். அப்படி ஒரு நம்பிக்கையாக விளங்கிய மகள் இன்று சடலமாக வீட்டில் வைக்கப்பட்டுள்ளதை கண்டு இளையராஜா மனம் நொந்துள்ளார்.

பிரபல பாடகியும், இளையராஜாவின் மகளுமான பவதாரிணி நேற்று கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவரின் உடல் இலங்கையில் இருந்து இன்று கொண்டு வரப்பட்டு சென்னை தி.நகரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்த நிலையில் மகளின் பிரிவை தாங்க முடியாத தந்தை இளையராஜா, அன்பு மகளே என பவதாரிணி சிறுவயது குழந்தையாக தன்னோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இளையராஜாவிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com