நிஜத்தில் கான்ஸ்டபிள் – நடிப்பில் வில்லன்!

vishal - P.N. sanny
vishal - P.N. sanny
Published on

கோட்டயம் கிழக்குக் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றி வந்த P.N.சன்னி சினிமா நடிகரானது சுவாரஸ்யமானது.

பத்ரன் இயக்கத்தில் மோகன்லால் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம், ‘ஸ்படிகம்’. இந்தப் படத்தில் மோகன்லாலுக்கு சவால் விடும் பயில்வான் போன்ற உடல்வாகுள்ள நடிகரைத் தேடியிருக்கிறார் இயக்குனர். அந்தச் சமயத்தில் அதில் முக்கிய வில்லனாக நடித்த ஜார்ஜ், அன்றைய மிஸ்டர் கேரளா பட்டத்தில் 2ஆம் பரிசு பெற்ற போலீஸ் கான்ஸ்டபிள் சன்னியை பற்றிச் சொல்லியிருக்கிறார். பிறகென்ன? இயக்குநரின் ஒரே பார்வையில் ஓக்கே ஆனார் சன்னி. அவர் நடித்த பாத்திரத்தின் பெயர், ‘பெருச்சாளி பாஸ்டின்’!

P.N.சன்னி
P.N.சன்னி

வில்லனாகத் தமது நடிப்பில் மலையாள மக்களை அசத்தி அவர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றார். அதன் பிறகு நிறைய மலையாள படத்தில் பரபரப்பாக நடித்து வருகிறார். ‘ஜோஜி’ என்ற படத்தில் ஃபஹத் ஃபாசிலின் தந்தையாக நடித்து கவனம் ஈர்த்தார். விஷாலின் ‘லத்தி’ பட இயக்குனர் A.வினோத் குமார் கண்ணில் சன்னி பட, அப்படத்தில் வில்லனாக ரமணாவின் அப்பா வேடத்திற்குத் தேர்வானார். படம் ரிலீசாகி இன்று சன்னி யின் கதாபாத்திரமும், அவரது தோற்றமும் நடிப்பும் ரசிகர்களையும் சினிமா வட்டாரங்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளன. அன்று மோகன்லால் வில்லனாக அறிமுகமானவர் இன்று விஷாலுக்கு வில்லனாக கேரளா எல்லையை தாண்டியுள்ளார். நல்ல வாய்ப்புகள் அமைந்தால் தமிழ் மற்றும் தெலுங்குப் படவுலகிலும் கவனம் செலுத்தத் தீர்மானித்துள்ளார் P.N.சன்னி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com