இந்தியாவின் டாப் 10 நடிகர்களின் பட்டியலை IMDB வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் 10வது இடத்தை நடிகர் விஜய் சேதுபதி பிடித்துள்ளார். இந்த பட்டியலில் 9வது இடத்தை நடிகர் அக்ஷய் குமாரும், 8வது இடத்தை சோபிதா துளிபாலாவும் பிடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்திருந்த சோபிதா, சமந்தாவின் மன முறிவுக்கு பிறகு நடிகர் நாகசெய்தன்யாவுடன் காதலில் இருப்பதால் அதிகம் பேசப்படும் நாயகியாக மாறி உள்ளார்.
7வது இடத்தில் கரீனா கபூரும், 6ம் இடத்தில் நடிகை தமன்னாவும் அதிகம் தேடப்படும் நட்சத்திரங்களாக மாறி உள்ள நிலையில் இந்த பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளார் நயன்தாரா. இந்த ஆண்டில் ஜவான் திரைப்படத்தில் நடித்தது மூலமாக பெரும் புகழை பாலிவுட்டில் ஈட்டியுள்ள நயன்தாரா இந்த பட்டியலில் முதல் முறை டாப் 10 பட்டியலில் இணைந்துள்ளார்.
அண்மையில் அதீத கவர்ச்சியின் மூலம் ரசிகர்களை கிறங்கடித்து வரும் வாமிகா கப்பி இந்த பட்டியலில் நான்காவது திட்டத்தை பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். தமிழில் வெளியான மாலை நேரத்து மயக்கம் திரைப்படத்தில் இவர் நாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் முன்னணி நாயகிகளான தீபிகா படுகோன் மற்றும் ஆலியா பட் ஆகியோர் மூன்றாவது மற்றும் இரண்டாவது இடங்களை பிடிக்க இந்த பட்டியலில் ஷாருக்கான் முதலிடத்தை பிடித்துள்ளார்.