"இந்திய சினிமா உலக சினிமாவாக மாறி வருகிறது" - அவதார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்!

James cameroon and rajamouli
James cameroon and rajamouliImge credit: Clapnumber

அவதார் பட இயக்குனர் ஜேம்ஸ் கேம்ரூன் ராஜமௌலியின் RRR திரைப்படத்தைப் பற்றி பேசுகையில் இந்திய சினிமா உலக சினிமாவாக உயர்ந்து வருகிறது என்று இந்திய சினிமாவைப் பற்றி பாராட்டிப் பேசினார்.

ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான அவதார் திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றதோடு குழந்தை ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்தது. இப்படத்தின் அடுத்த பாகத்திற்கான எதிர்ப்பார்ப்பு பெரிதளவில் கூடியது. அந்தவகையில் 'அவதார் – தி வே ஆஃப் வாட்டர்' என்ற இரண்டாம் பாகம் 2022ம் ஆண்டு வெளியானது.

அவதார் படத்தை ஐந்து பாகங்களாக வெளியிட வேண்டும் என்று  திட்டமிட்ட படக்குழு இரண்டு பாகங்களை வெற்றிக்கரமாக வெளியிட்டது. அதுவும் இரண்டாம் பாகம் 3டி தொழில்நுட்பத்துடன் வெளியானது. இதனையடுத்து மூன்றாம் பாகத்தின் வேலைகள் மிகவும் மும்முரமாக நடந்து வருகின்றன. இப்படம் 2025ம் ஆண்டு வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 4ம் தேதி லாஸ் ஏஞ்சலில் 51வது ‘Saturn விருது’ நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஜேம்ஸ் கேம்ரூன் இந்திய சினிமா பற்றியும் அவதார் படத்தைப் பற்றியும் பேசினார்.  அதாவது RRR படம் ஒரு அற்புதமான படைப்பு என்றும் இந்திய சினிமா உலக தரத்தில் வளர்ந்து வருகிறது என்றும் கூறினார்.

மேலும் அவர் அவதார் படத்தைப் பற்றி கூறுகையில், “அவதார் படத்தின் ஐந்து பாகத்திற்கான முழு ஸ்கிரிப்ட்டையும் எழுதி முடித்துவிட்டோம். இதை ஏழு பாகம் வரை எடுக்க உள்ளோம்” என்று கூறினார். இதற்கு முன்னர் ஐந்து பாகங்கள் திட்டமிட்ட படக்குழு இப்போது ஏழு பாகம் வரையிலான ஸ்கிரிப்ட்டையே முடித்துவிட்டது.

இதையும் படியுங்கள்:
இந்தியில் ரீமேக்காகும் தெறி படம்.. ஹீரோ யார் தெரியுமா?
James cameroon and rajamouli

சென்ற ஆண்டு ‘ critics choice awards’ என்ற விருதை RRR திரைப்படம் வென்றது. அப்போதும் ஜேம்ஸ் கேம்ரூன் ராஜாமௌலியின் படைப்பை மனம் திறந்துப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சென்ற இடமெல்லாம் RRR திரைப்படத்தையும் ராஜமௌலியையும் ஜேம்ஸ் பாராட்டி வருவதால் RRR திரைப்படம் இந்திய சினிமாவை உலக சினிமா தரத்திற்கு கொண்டு சென்றுவிட்டது என்றே கூற வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com