"இண்டியானா ஜோன்ஸ்" நடிகர் ஹாரிஸன் ஃபோர்டுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

"இண்டியானா ஜோன்ஸ்" நடிகர் ஹாரிஸன் ஃபோர்டுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
Published on

உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ்ட் நாட்டில் 76வது ஆண்டாக கடந்த 16ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இத்திரைப்பட விழாவில் ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் வெளியாகும் சிறந்த படங்கள் தேர்வுச் செய்யப்பட்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு கௌரவப்படுத்தப்படுவது வழக்கம். அதேபோல், திரைத்துறையில் சாதித்த நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் கௌரவிக்கப்படுவார்கள்.

அந்த வகையில், நேற்று நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் மூன்றாவது நாளில், ஹாரிஸன் ஃபோர்டு நடித்த ‘இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்ட்டினி’ படத்தின் சிறப்பு திரையிடல் நடைபெற்றது. ஜேம்ஸ் மேங்கோல்ட் இயக்கியுள்ள இதுதான் இண்டியானா ஜோன்ஸ் படவரிசையின் இறுதி பாகமாகும். 1981ஆம் ஆண்டு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியான இதன் முதல் பாகம் பெரும் வெற்றியடைந்தது. அந்த படத்தில் நாயகனான நடித்த ஹாரிஸன் ஃபோர்டுக்கு அப்போது 39 வயது. தற்போது 80 வயதாகும் அவர் இண்டியானா ஜோன்ஸ் கதாபாத்திரத்துக்கு கேன்ஸ் விழாவில் கண்ணீர் மல்க விடைகொடுத்துள்ளார்.

‘இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்ட்டினி’ முடியும் போது பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று ஹாரிஸன் ஃபோர்டுக்கு ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து கைதட்டினர். அப்போது அவரது சினிமா பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக வாழ்நாள் சாதனையாளருக்கான மிக உயரிய விருதான ‘தங்கப் பனை விருது அவருக்கு வழங்கப்பட்டது.

விருதை பெற்றுக்கொண்ட ஹாரிஸன் ஃபோர்டு அனைவர் முன்னிலையில் பேசியபோது,இந்த விருது எனக்கு பல விஷயங்களை நினைவூட்டுகிறது. பொதுவாக ஒருவர் இறப்பதற்கு நம்முடைய வாழ்க்கை நம் கண்களுக்கு முன்பாக வந்து செல்லும். அதுபோல் ஒரு தருணம் தற்போது இந்த விருதை பெறும்போது என் வாழ்க்கையின் ஒரு பகுதி என் கண் முன்னே வந்து சென்றது. நான் இன்றைக்கு இந்த நிலையை அடைந்திருக்கிறேன் என்றால், அதற்கு என் மனைவிதான் காரணம். இந்த பெரிய மரியாதைக்கு மீண்டும் நன்றி என உணர்ச்சிபொங்க இண்டியானா ஜோன்ஸ் படத்திற்கு அவர் விடைகொடுத்தார்.

‘Indiana Jones’ Harrison Ford, 2023 Cannes Film Festival

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com