மனிதாபிமானம் இல்லாத நடிகை அமலாபால் – மேக்கப் கலைஞர் ஹேமா!

Amalapaul
Amalapaul

தமிழ் நடிகை அமலாபால் குறித்து பிரபல மேக்கப் ஆர்டிஸ்ட் ஹேமா ஒரு பேட்டியில் பேசியுள்ளது அனைவரின் கவனத்தையும் திசை திருப்பியுள்ளது.

அமலாபால் சித்தார்த், விஜய், ஜெயம்ரவி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் முதலில் மதராசப்பட்டினம் இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். சில காலங்களில் அவர்கள் விவாகரத்து செய்துக்கொண்டனர். அதன்பின்னர் நீண்ட காலத்திற்கு பிறகு சமீபத்தில் அமலாபால் தனது நண்பர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார். இதனையடுத்து அவர்களுக்கு குழந்தையும் பிறந்தது.

இந்தநிலையில் பல முன்னணி நடிகைகளுக்கு மேக்கப் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றிய ஹேமா ஒரு பேட்டியில் அமலாபால் குறித்து பேசியுள்ளார்.

"நான் ஒருமுறை நடிகை அமலா பாலின் படப்பிடிப்புக்கு சென்றேன். அப்போது ஏப்ரல் மற்றும் மே மாதம் என்பதால் கடுமையான வெயில் இருந்தது. படப்பிடிப்பு நடந்த இடத்தில் நிழலோ, மரமோ இல்லாததால் கொஞ்ச நேரம் கூட எங்கேயும் அமர முடியவில்லை. அங்கிருந்த சில பெண்களும் தவித்தனர். இதனால் அங்கே இருந்த கேரவனுக்குள் சென்று அமர்ந்து கொண்டோம். ஆனால், நாங்கள் அமர்ந்து இருந்த கொஞ்ச நேரத்திலேயே நடிகை அமலா பால் தனது மேனேஜரை அழைத்து எங்களை வெளியேறும்படி சொல்லினார்.

இவ்வளவு கடுமையான வெயிலில் எங்கு போய் நிற்பது என்று யோசித்தோம். ஆனால், நாங்கள் இறங்கும் வரை அவர் எங்களை விடவே இல்லை. அதனால் கேரவனை விட்டு இறங்கிவிட்டோம். அப்படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை இதுபோல் பல சம்பவங்கள் எனக்கு நடந்தது. நான் பல ஸ்டார் நடிகைகளுக்கு மேக்கப் போட்டு இருக்கிறேன். அவர்கள் அனைவரும் என்னிடம் மிகவும் கனிவாக நடந்து கொள்வார்கள். நடிகை தபு எங்களை போன்ற கலைஞர்களுக்காக வேன் எல்லாம் கூட புக் செய்து நன்றாக பார்த்துக்கொண்டார்.

இதையும் படியுங்கள்:
சர்க்காடியன் தாளங்களைப் புரிந்து நடந்தால் பல உடல்நலப் பிரச்னைகளைத் தடுக்கலாம்!
Amalapaul

ஆனால், அமலா பால் கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் எங்களிடம் நடந்துக்கொண்டார். படப்பிடிப்பில் மிக முக்கியமானவர்களில் ஒருவர் சிகையலங்கார நிபுணர்கள் மற்றும் மேக்கப் கலைஞர்கள் தான். கேமரா முன் நடிக்கும் நடிகர், நடிகைகளை அழகாக காட்டுவது அவர்கள் தான். இருந்தாலும் பல நேரங்களில் அவர்களுக்கு உரிய மரியாதையோ, அங்கீகாரமோ கொடுக்கப்படுவது இல்லை." என்று பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com