Lights Out
Lights Out

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

Published on

2016 இல் வெளியான Lights Out என்கிற திகில் திரைப்படம், அனைவரும் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய ஒரு திகில் திரைப்படமாகும். அதன் தனித்துவமான திரைக்கதை மற்றும் பயமுறுத்தும் காட்சிகளால் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்தப் படம் பற்றிய சில சுவாரசியமான உண்மைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.‌ 

Lights Out திரைப்படத்தின் சிறப்பம்சமே அதன் கதைதான். இந்த திரைப்படம் Sandberg என்பவர் இயக்கிய அதே பெயரில் வெளிவந்த ஒரு குறும்படத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த குறும்படம் யூட்யூபில் வைரல் ஆனதைத் தொடர்ந்து, ஹாலிவுட் தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தத் திரைப்படத்தை ஹாரர் திரைப்படங்களை இயக்குவதில் வல்லவரான 'ஜேம்ஸ் வான்' பெரிய திரையில் கொண்டுவர உதவினார். 

ஒரு குறும்படத்திலிருந்து திரைப்படமாக எடுக்கப்பட்டு வெற்றி கண்ட திரைப்படங்களில் இதுவும் ஒன்று. லைட்ஸ் அவுட் திரைப்படத்தின் மையக்கரு இருளில் மட்டுமே காணக்கூடிய ஒரு பயங்கரமான பேயைப் பற்றியதாகும். இது பலருக்கு நீண்ட காலமாக இருக்கும் பயத்தை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியது. அதாவது பொதுவாகவே பலருக்கு இருட்டு என்றால் பயமாக இருக்கும். இந்த திரைப்படத்தை நீங்கள் பார்த்துவிட்டால், இருட்டைக் கண்டு மேலும் அஞ்ச ஆரம்பிப்பீர்கள். 

குறிப்பிட்ட ஒரு காட்சியில் விளக்கு அணைந்து அணைந்து எரியும். அப்போது விளக்கு அணையும் போது பேய் இருக்கும், வெளிச்சம் வந்ததும் பேய் காணாமல் போகும். அப்படி ஒவ்வொரு முறை விளக்கு அணைந்து எரியும்போதும் பேய் கொஞ்சம் கொஞ்சமாக கிட்ட வருவது போல காட்டும்போது உண்மையிலேயே, பயம் என்றால் என்ன என்பதை நீங்கள் உணர்வீர்கள். 

இதையும் படியுங்கள்:
போய் தூங்குங்க, இல்ல ஹஸ்தர் வந்துருவான்! 
Lights Out

இந்த திரைப்படத்தில் நடித்த அனைவருமே சூப்பராக நடித்திருப்பார்கள். குறிப்பாக, இந்தத் திரைப்படத்தில் பயமுறுத்தும் காட்சிகள் அனைத்துமே முற்றிலும் புதுமையானதாக இருக்கும். இதன் பின்னணி இசை உங்களது பயத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். பல திரைப்படங்களில் CGI காட்சிகளைக் கொண்டு நம்மை பயமுறுத்த முயற்சிப்பார்கள். ஆனால், இந்தத் திரைப்படத்தை பார்த்தால், யதார்த்தமான பயம் என்றால் என்ன என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். 

வெளியானது முதலே Lights Out திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி அடைந்தது. உலக அளவில் சுமார் $148 மில்லியனுக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. நீங்கள் உண்மையான பய அனுபவத்தை விரும்பும் நபராக இருந்தால், ஒருமுறையாவது கட்டாயம் இந்தத் திரைப்படத்தை பார்த்து விடுங்கள். 

உங்களுக்கு தைரியம் இருந்தால், இரவு நேரத்தில் தனியாக இந்தப் படத்தை பாருங்கள் பார்க்கலாம். 

logo
Kalki Online
kalkionline.com