இந்தப் படத்தை இரவில் பார்க்க உங்களுக்கு தைரியம் இருக்கா?

The Exorcist
The Exorcist
Published on

பேய் படம் என்றாலே உங்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது காஞ்சனா, அரண்மனை, ஈவில் டெட், கான்ஜுரிங் போன்ற திரைப்படங்கள்தான். ஆனால், 1973 ஆம் ஆண்டு வெளியான ‘The Exorcist’ திரைப்படம், திகில் திரைப்பட உலகில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியது. இந்தத் திரைப்படம் வெளியான பிறகு திகில் திரைப்படங்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்ற கண்ணோட்டமே முற்றிலுமாக மாறிவிட்டது. இன்று ஒரு பேய் படம் எடுத்தாலும் அதில் Exorcist  திரைப்படத்தின் சாயல் கொஞ்சமாவது இருக்கும். 

The Exorcist திரைப்படம் ‘William Peter Blatty’ என்பவரால் எழுதப்பட்ட அதே பெயரிலான ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டது. இந்த நாவல் 1971 ஆம் ஆண்டு வெளியானது. நாவலில் வர்ணிக்கப்பட்டுள்ள பயங்கரமான சம்பவங்கள் திரைப்படத்தில் மேலும் வலுவாக சித்தரிக்கப்பட்டு இருந்தது. 

இந்தத் திரைப்படம் வெளியாகும்போது பல நாடுகளில் தணிக்கை பிரச்சனைகளை எதிர்கொண்டது. சில காட்சிகள் மிகவும் பயங்கரமாக இருப்பதாகக் கூறி அவற்றை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்தன. இருப்பினும் இத்திரைப்படத்தின் இயக்குனர் அந்த காட்சிகளை நீக்க மறுத்துவிட்டார். 

தொடக்கத்தில் அமெரிக்காவில் வெறும் 25 திரையரங்குகளில் மட்டுமே இந்தப் படம் திரையிடப்பட்டது. இந்த படத்தை பார்த்த மக்கள் உச்சகட்ட பீதி அடைந்தனர். ஒரு சிலர் பயந்து போய் திரையரங்கிலேயே வாந்தி எடுத்தனர். பின்னர், மக்கள் மத்தியில் பிரபலமடைந்து, குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வருமானத்தை ஈட்டியது. இது திகில் திரைப்படங்கள் மீதான மக்களின் ஆர்வத்தை அதிகரித்தது. 

ஒரு திகில் திரைப்படம் என்றால் Exorcist போலதான் இருக்க வேண்டும் என்கிற அளவுகோலாக இத்திரைப்படம் அமைத்தது. இந்த திரைப்படத்திற்கு முன் திகில் திரைப்படங்கள் பெரும்பாலும் காமெடி கலந்தவையாகவே இருக்கும். ஆனால் இந்த திரைப்படம் திகிலை மிகவும் எதார்த்தமாக சித்தரித்தது. குறிப்பாக இதன் பின்னணி இசை பயத்தை உச்சகட்டத்திற்கு கொண்டு சென்றது. 

இதையும் படியுங்கள்:
பல பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது பூனைக்காலி பழம்!
The Exorcist

இந்த திரைப்படத்தை தயாரிக்கும் போது பல அமானுஷ்ய சம்பவங்கள் நடந்ததாக கூறப்படுகிறது. இதற்காக போடப்பட்ட செட்டில் அமானுஷ்ய ஒலிகள், திடீரென அணைந்து விடும் மின்விளக்குகள் போன்ற சம்பவங்கள் நடந்ததாக சொல்கின்றனர். இந்த சம்பவங்கள் திரைப்படத்தின் மீதான பயத்தை மேலும் அதிகரித்தது. இந்த திரைப்படத்தின் கதைக் கருவைப் பயன்படுத்தி பல புத்தகங்கள், காமிக்ஸ் மற்றும் வீடியோ கேம்கள் உருவாகின. இது எல்லாத் துறைக்கும் ஒரு ட்ரெண்ட் செட்டிங் திரைப்படமாக மாறியது. 

மக்களுக்கு உண்மையான பேய் பயத்தை காட்டியதால், ஆஸ்கார் விருதை தட்டிச் சென்ற முதல் பேய் படம் என்ற பட்டத்தையும் பெற்றது. இந்தத் திரைப்படம் திகில் திரைப்பட ரசிகர்களுக்கு எப்போதும் நினைவில் இருக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com