

"பிரிடேட்டர்" (Predator) படங்களைப் பார்த்து நாம எல்லாருமே மிரண்டு போயிருப்போம். ஆனா, அந்த முகமூடிக்குப் பின்னாடி இருக்கிற அந்த வேற்றுக்கிரகவாசிகள் யாரு? அவங்க ஏன் இப்படி கண்டபடி வேட்டையாடுறாங்க? அவங்களோட கலாச்சாரம் என்ன? அவங்களோட உண்மைக் கதையை கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம் வாங்க.
முதல்ல, நாம பிரிடேட்டர்னு சொல்ற இவங்களோட உண்மையான பெயர் 'யவூஜா' (Yautja). இவங்களும் ஆரம்பத்துல 'யவூஜா பிரைம்'னு ஒரு உலகத்துல சாதாரண மக்களாத்தான் வாழ்ந்துட்டு இருந்தாங்க. ஆனா, 'அமெஞ்சி' (Amengi) அப்படின்னு இன்னொரு ஏலியன் இனம், இவங்களைப் பல வருஷமா அடிமையா வச்சிருந்தது. ஒரு பெரிய புரட்சிக்குப் பிறகு, அமெஞ்சியைத் தோற்கடிச்ச யவூஜா மக்கள், ஒரு முடிவுக்கு வந்தாங்க.
நாம ஏன் அடிமையானோம்? நமக்குச் சரியா சண்டை போடத் தெரியாததாலதான். இனிமே, வேட்டையாடுறது, சண்டை போடுறது இது மட்டும்தான் நம்ம கலாச்சாரம்னு முடிவு செஞ்சாங்க. அன்னைக்கு ஆரம்பிச்சதுதான் இந்த வேட்டை. இப்போ அவங்க பிரிடேட்டர்களா மாறிட்டாங்க.
ஆனா, இவங்க சும்மா கண்ணுல படுறவங்களை எல்லாம் சுட்டுத் தள்ளுறது கிடையாது. அவங்களுக்குன்னு ஒரு 'ஹன்டிங் கோட்' (Hunting Code) அதாவது வேட்டை விதிகள் இருக்கு. சாப்பாட்டுக்காகவோ பசிக்காகவோ இவங்க வேட்டையாடுறது இல்லை; மரியாதைக்காகவும், கௌரவத்துக்காகவும் மட்டும்தான் வேட்டையாடுறாங்க.
முக்கியமான விதி, ஆயுதம் இல்லாதவங்களையோ (Unarmed), கர்ப்பிணிப் பெண்களையோ, வயதானவர்களையோ, குழந்தைகளையோ தாக்கவே மாட்டாங்க. அவங்க எதிரி, அவங்களுக்குச் சமமா சண்டை போடுற திறமையோட இருக்கணும். ஒருவேளை எதிரி கிட்ட ஆயுதம் இல்லைன்னா, இவங்களும் தன்னோட மாஸ்க், ஆயுதம் எல்லாத்தையும் கழட்டி வச்சிட்டு, ஒத்தைக்கு ஒத்தையா நின்னு சண்டை போடுவாங்க. இந்த மாதிரி கௌரவமா ஜெயிக்கிறதுதான் அவங்களுக்குப் பெருமை. ஒரு சண்டையில தோத்துட்டா, அங்கேயே செத்துடணும்; புறமுதுகு காட்டி ஓடவே கூடாது.
பிரிடேட்டர்களோட அல்டிமேட் எதிரி யாருன்னு கேட்டா, அது 'ஜீனோமார்ஃப்' (Xenomorph) அதாவது நாம படத்துல பார்க்கிற 'ஏலியன்கள்'தான். ஒரு யவூஜா வீரன், தன்னோட முதல் வேட்டையா ஒரு ஏலியனைக் கொன்னாதான், அவனுக்கு அந்த இனத்துல முழு மரியாதை கிடைக்கும். பல சமயம், பிரிடேட்டர்கள் இந்த ஏலியன்களை வேணும்னே பிரீட் பண்ணி, அதை வளர்த்து, வேட்டையாடுறதையே ஒரு விளையாட்டா வச்சிருக்காங்க.
நம்ம படத்துல பார்க்கிற பிரிடேட்டரோட லுக், முதல்ல இப்படி இல்லையாம். ரொம்ப காமெடியா இருந்ததால, அர்னால்டு மற்றும் ஜேம்ஸ் கேமரூன் (டைட்டானிக் டைரக்டர்) இவங்களோட ஆலோசனையின் பேரில்தான், இப்போ நாம பார்க்கிற இந்த பயங்கரமான லுக்குக்கு மாத்துனாங்க. ஆகமொத்தம், பிரிடேட்டர்கள் வெறும் கொலையாளிகள் இல்லை; அவங்களுக்குன்னு ஒரு கௌரவம், கலாச்சாரம், விதிகள்னு எல்லாமே இருக்கு. அவங்க வாழ்க்கையே வேட்டையைச் சுத்திதான் அமைஞ்சிருக்கு.